ஆர்.எஸ்.எஸ்ஸை பின்பற்றி செயல்பட வேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்!

Share this News:

சென்னை (31 டிச 2020): ஆர்எஸ்எஸ் அமைப்பை போல் பாமகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கட்சியினரிடம் கூறுகையில், ‘ பாமகவினர் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கண்ணுக்குத் தெரியமால் தேர்தல் வேலைகளைச் செய்வார்கள் என்றும் அவர்களைப்போல் செயல்பட வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தல்களில் பாமக தோல்வி அடைந்தற்கான காரணம், பாமக நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்பதுதான் என்று குறிப்பிட்ட ராமதாஸ், பாமக கோட்டையான தர்மபுரியில் அன்புமணி தோல்வியடைந்தற்கு காரணமும் பாமகவினர் சரியாக தேர்தல் வேலை செய்யாததே என்றும் கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply