ரஜினியின் மக்கள் மன்றம் கலைப்பு – நடிகர் ரஜினி பரபரப்பு தகவல்!

சென்னை (12 ஜூலை 2021): “அரசியலுக்காக தொடங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றம், முழுமையாக கலைக்கப்படுகிறது!” என நடிகர் ரஜினி இன்று அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை தனிக்கட்சி தொடங்க வைத்து தமிழகத்தில் வலுவாக காலூன்ற பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) திட்டமிட்டிருந்தது.

ஆனால் ‘உடல் நிலை ஒத்துழைக்காததால் அரசியலுக்கு வரப்போவதில்லை!’ என கடந்த தேர்தலுக்கு முன்பு ரஜினி அறிவித்தார்.

பின்பு அண்ணாத்தே படப்பிடிப்புக்கு போனார். பின்னர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய ரஜினி, தமது மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்தித்தார்.

முன்னதாக ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பி விட்டது.

அந்த பேட்டியில், “எதிர்காலத்தில் அரசியலுக்கு வருகிறேனா? இல்லையா என்பதை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு உங்களிடம் சொல்கிறேன்!” என கூறினார் ரஜினிகாந்த்.

இதற்கிடையே தற்போது பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

அதில், “எதிர்காலத்தில் தாம் அரசியலுக்கு வரப்போவது இல்லை; அரசியலுக்காக தொடங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றம் முழுமையாக கலைக்கப்படுகிறது!” என அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ஒருபோதும் இனி ரஜினி அரசியலுக்கு வரப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply