ரஜினி குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தில் ஒரு பின்னணி உண்டாம்!

சென்னை (07 பிப் 2020): ஐ.டி.ரெய்டு வந்துவிடுவார்கள் என்பதால்தான் குடியுரிமை சட்டத்திற்கு ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் கம்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அழகிரி, “நடிகர் ரஜினிகாந்த்துக்கு குடியுரிமை சட்டம் பற்றி தெரியாது. வருமான வரி சோதனைக்கு பயந்தே அவர் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசுகிறார்.

நடிகர் விஜய் தனது திரைப்படத்தில் அரசியல் குறித்து பேசியதால் வருமான வரித்துறையினர் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி படப்பிடிப்பு தளத்தில் இருந்தவரை அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டுகின்றனர்.

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்கட்சிகள் மட்டுமல்லாது உலக நாடுகளும் கண்காணித்து வருகின்றன.

எச்.ராஜா நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்றுதான் அழைப்பார். ஜோசப், முகமது என பெயர் வைத்திருப்பவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பேசக்கூடாதா? இதனை பார்க்கும் போது தமிழகத்தில் எச்.ராஜா சொல்வதைத்தான் அ.தி.மு.க. அரசு செய்து வருகிறதோ? என சந்தேகம் எழுகிறது.” என்றார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply