நெய்வேலியில் வெடி விபத்து – 6 பேர் பலி

நெய்வேலி (01 ஜூலை 2020): நெய்வேலியில் உள்ள லிக்னைட் மின் உற்பத்தி நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது

நெய்வேலி என்.எல்.சி யில் உள்ள இரண்டாவது நிலையத்தின் ஐந்தாவது அலகில் இந்த திடீர் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 17 பேர் காயமுற்றிருப்பதாகவும் நெய்வேலி மின் உற்பத்தி ஆய்வாளர் லதா தெரிவித்துள்ளார்.

காயமடைந்த அனைவரும் என்எல்சிஐஎல் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையத்தில் ஏற்கனவே 7.5.2020 அன்று வெடி விபத்து ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நிகழ்ந்துள்ள வெடி விபத்தினை கேள்விப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வருடன் தொலைபேசியில் உரையாடி அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்: