ஸ்டாலினுக்கு மோடி – அமித்ஷாவிடமிருந்து திடீர் தொலைபேசி அழைப்பு!

சென்னை (05 ஏப் 2020): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமீத் ஷா ஆகியோர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளனர்.

இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது பிரதமரின் உடல்நலன் குறித்து தி.மு.க தலைவரும் கேட்டறிந்துள்ளார்.

பின்னர், ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்கு தி.மு.க-வுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்குவோம் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தி.மு.க தலைவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply