இந்திய ஊடகங்கள் மற்றும் நீதித்துறை மீதுமஹுவா மொய்த்ரா நேரடி பாய்ச்சல்!

Share this News:

புதுடெல்லி (09 பிப் 2021): திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் தனது வாதங்களை எழுப்பியுள்ளார்

மஹுவா, . மத்திய அரசின் கொள்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற உரையில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயைக் குறித்து நேரடியாகவே விமர்சித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ”இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள துன்பங்களுக்கு காரணம் ஜனநாயகத்தின் தூண்களான ஊடகம் மற்றும் நீதித்துறையும் பொதுமக்களை கைவிட்டுவிட்டதுதான். புனிதமாக கருதப்படும் நீதித்துறை இனி புனிதமாக இருக்க முடியாது. பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவர் எப்போது இந்த நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்துகொண்டு, தன் மீதான குற்றச்சாட்டை தானே விசாரித்துக் கொண்டாரோ, அதில் குற்றம் செய்யாதவராக தன்னை அறிவித்துக் கொண்டாரோ, பணி ஓய்வு பெற்ற மூன்றே மாதங்களில் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டாரோ அப்போதே அதன் புனிதம் சிதைந்துவிட்டது.” என்றார்.

மேலும் அரசின் செயல்பாடுகளை கேள்வி கேட்டதற்காக, அரசு விவகாரங்களில் கருத்து தெரிவித்ததற்காக காவல்துறையின் துன்புறுத்தலை மக்கள் எதிர்கொள்கிறார்கள். கோழைகள் அதிகாரத்தின் பொய்யான துணிச்சலுக்குப் பின்னாலும், வெறுப்பின் பின்னாலும், மதவெறியின் பின்னால் மறைந்து கொள்கிறார்கள். இதனை அவர்கள் தைரியம் என்கிறார்கள்” என்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

விவசாயச் சட்டங்களுக்கு எதிராக 90 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராடிவருகிறார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய அரசு யாரையும் நியமிக்கவில்லை. அந்த வேளாண் சட்டங்களை இந்த அரசின் கூட்டணி கட்சிகள் கூட எதிர்த்திருக்கின்றன. மத்திய அரசு அறத்தைவிட மிருகத்தனத்தையே நம்புகிறது என்பதை இது உணர்த்துகிறது” என்றார்.

மஹுவா மொய்த்ராவின் முன்னாள் தலைமை நீதிபதி குறித்த பேச்சுக்கு பேச்சுக்கு மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மற்றும் பா.ஜ.க எம்.பி நிஷிகண்ட் துபே எதிர்ப்பு தெரிவித்தார்கள்.


Share this News:

Leave a Reply