ஓபிஎஸ் சசிகலா இணைந்து அதிமுகவை வழி நடத்த தேவர் சமூகம் கடிதம்!

Share this News:

சென்னை (30 ஜூலை 2022): தேவர் சமூகம் ஒன்று கூடி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இணைந்து அதிமுகவை வழி நடத்திட வேண்டும் என தேவர் அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர்.

சுமார் 100 தேவர் அமைப்பினர் கைகோர்த்து ஓபிஎஸ், சசிகலா ஆகிய இருவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், பாரம்பரியமாக தேவர் சமூகம் ஆதரித்து வந்த அதிமுகவை சசிகலா அணியுடன் மீட்டெடுக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு உயிர் கொடுத்ததே தேவர் சமுதாயம் என்றும், தலைவர்கள் ஒன்றிணைந்து, சிதைந்து போகாமல் கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் சசிகலா வேறு தாய்க்கு பிறந்தாலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரி என்றும், அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மறைந்த முதல்வர் ஜெயாவின் நம்பிக்கைக்கு உரியவர் ஓபிஎஸ் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் நிலையில் தேவர் சமூகத்தின் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply