தமிழகத்தில் ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை (28 ஜூன் 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளன. மகாராஷ்டிரா, டெல்லியை அடுத்து தமிழகம்தான அதிகப்படியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34,805 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 3,713 பேரில் 2,300 பேர் ஆண்கள், 1,412 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார்

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2,737 பேர் சிகிச்சை குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 44 ஆயிரத்து 94 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள்.

உயிரிழந்தவர்கள், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 33 ஆயிரத்து 213 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.

நேற்று சென்னையில் மட்டும் புதிதாக 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்: