தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் மரணம் – பலி எண்ணிக்கை11 ஆக உயர்வு!

சென்னை (12 ஏப் 2020): கொரோனா நோய்த்தொற்றுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 969-ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது.

இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்றுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45 வயது பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். இதனால் 10 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயா்ந்துள்ளது என சுகாதாரத் துறை கூறியுள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply