12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமைபப்டுத்தல் அவசியம் -தமிழக சுகாதாரத்துறை!

சென்னை (28 நவ 2021): கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரான், பல்வேறு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்திற்கு 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமைபப்டுத்தல் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆபத்தான நாடுகளின் பட்டியலில் 12 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே, ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இதில் வளைகுடா நாடுகள் இடம்பெறவில்லை.

12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கோவிட் டெஸ்ட் எதிர்மறையாக இருந்தாலும், ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply