கொரோனா சிகிச்சைக்கு பின் திருச்சியிலிருந்து 32 பேர் வீடு திரும்பல்!

திருச்சி (16 ஏப் 2020): கொரோனா தொற்று சிகிச்சைக்குப் பின் திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து 32 பேர், இன்று தங்களது வீடுகளுக்குத் திரும்பினர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 32 பேர் பூரண குணமடைந்தனர். இதையடுத்து அவர்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வனிதா மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனை வளாகத்தில் கைதட்டி உற்சாகப்படுத்தி இன்று காலை வழியனுப்பி வைத்தனர்.

மீதமுள்ளவர்கள் சீரான உடல் நிலையுடன் இருப்பதாகவும், விரைவில் முழுமையாகக் குணம் அடைவார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திருச்சியில் மட்டும் ஒரேநாளில் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply