இப்படி பேசிடுச்சே அந்த பொண்ணு – சீறிய கமல்!

சென்னை (31 மார்ச் 2021): விஐபி தொகுதியாக பார்க்கப்படுவதில் மிக முக்கியமானது கோவை தெற்கு தொகுதி.. தேர்தலின் ஆரம்பத்தில் இருந்தே ஸ்டிராங் வேட்பாளர்களால், கணிப்பில் ரொம்ப குழப்பத்தை தந்து வரும் தொகுதி இது..

பிரச்சாரத்தின் துவக்கத்தில் இருந்தே அரசியல் களை கட்டி வரும் தொகுதி இது.. இதுவரை வந்த இத்தனை கருத்து கணிப்புகளில், இங்கு யாருக்கு வெற்றி என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியவில்லை.. அந்த அளவுக்கு வானதி & கமல் இரு ஜாம்பவான்கள் டஃப் தந்து வருகிறார்கள்.

ன் அன்பை நேரடியாகவும், அபரிமிதமாகவும் பெற்றவர்கள்.. துக்கடா அரசியல்வாதி என்று கமல் விமர்சிக்க போய், இதற்கு வானதி கொந்தளித்துவிட்டார்.

இதை கண்டித்து நேற்று வானதி பேசுகையில் அந்த நடிகர்கிட்ட, நீங்க இத்தனை நாள் லிப் சர்வீஸ் மட்டும்தான் பண்ணீங்களா? லிப் சர்வீஸ்ன்னா என்ன? அப்படின்னா 2 அர்த்தத்தில் நீங்க அவருக்கு எடுத்துக்கலாம்.. ஒன்னு, உதட்டளவில் சேவை செய்யறது, இன்னொன்னு உதட்டுக்கு மட்டுமே சேவை செய்யற நீங்க என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதின்னு சொல்றீங்களா? இதுக்கு அவர் பதில் சொல்லியே ஆகணும்.. மக்கள் ஒன்னும் முட்டாள்ங்க இல்லை” என்று பிரசாரத்தில் பேசியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் டிவிட்டரில் கொந்தளித்துள்ள கமல்ஹாசன், “வெற்றி வேட்கையில் நாவடக்கம் இல்லாமல் பேசுகிறார்கள்” என்று வானதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply