சென்னையில் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி!

சென்னை (19 ஜன 2022): சென்னை தி.நகரிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையை இந்தியன் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வருகிறது பிரைம் சரவணா ஸ்டோர். இந்நிறுவனம், இந்தியன் வங்கிக்கு செலுத்தவேண்டிய ரூ.120 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், கடனை திருப்பி செலுத்தாததால் சென்னை தி.நகரிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையை இந்தியன் வங்கி ஜப்தி செய்துள்ளது. ரங்கநாதன் தெருவிலுள்ள கடை மற்றும் உஸ்மான்…

மேலும்...

சரவணா ஸ்டோர்ஸில் நடந்த பரபரப்பு சம்பவம்!

சென்னை (07 ஜன 2020): சென்னை சரவணா ஸ்டோர்ஸ் எஸ்குலேட்டரில் சிறுவன் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொங்கல் பண்டிகைக்கு தாயுடன் துணி எடுக்கச் சென்ற போது சிறுவன் ரனில்பாபு எஸ்கலேட்டரில் சிக்கி படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்...