தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பேரிடர் மீட்புப்படை விரைவு!

சென்னை (06 டிச 2022): தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறுகிறது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறும் நிலையில் டிசம்பர் 8 ஆம் தேதி இது புயலாகவும் தீவிரமடைகிறது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்படுகிறது. இந்த பெயரை ஐக்கிய அரபு நாடுகள்…

மேலும்...

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

சென்னை (30 டிச 2021): சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 8 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மழைநீர் தேக்கம் மட்டுமன்றி புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் கடுமையாக ஏற்பட்டுள்ளது. தொடர் மழை, போக்குவரத்து நெரிசல், மழைநீர் தேக்கம் போன்றவற்றால் பணி முடிந்து வீட்டுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

மேலும்...

தமிழகத்தில் நவம்பர் 13ல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

சென்னை(1 நவ 2021): தமிழகத்தில் நவம்பர்,13ல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்கனவே ஒன்று உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை (நவ.11) கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித்தீர்க்கும் என ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

சென்னை (09 நவ 2021): கனமழையை அடுத்து கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 16 கடலோர மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து இந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று இரவு சென்னை வருகிறார்கள். சென்னையில் மழை குறைந்தாலும் வெள்ளம் தொடர்கிறது வெள்ள பாதிப்புக்கு தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெட் அலர்ட்!

துபாய் (17 ஜன 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் உட்பட பல பகுதிகளில் கடும் மூடுபனி மற்றும் மங்கலான கால சூழ்நிலையால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது. அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மான் பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புரவி புயல் – தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!

சென்னை (02 டிச 2020): நிவர் பயலை தொடர்ந்து மீண்டும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்தது. இதையடுத்து நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. புரெவி புயல், பாம்பனுக்கு 470 கி.மீ தொலைவிலும், குமரிக்கு 650…

மேலும்...