ஆர்.எஸ்.எஸ்.தொடங்கும் முதல் ராணுவ பள்ளி!

லக்னோ (28 ஜன 2020): உத்திர பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முதல் ராணுவ பள்ளியை தொடங்குகிறது. உ.பி., மாநிலம் புலந்த்செகரில், ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் ராணுவ பள்ளி துவங்கப்பட உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., தலைவராக இருந்த ராஜு பையாவின் பெயரில், ‘ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர்’ என அழைக்கப்படும். பள்ளியின் கட்டடம் தயாராக உள்ள நிலையில் வகுப்புகள் ஏப்ரல் மாதம் முதல் துவங்கவுள்ளது. மேற்கண்ட தகவலை ஆர்.எஸ்.எஸ்., செயல்பாட்டாளர் கேணல் சிவ் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும்...