
ராமர் கோவில் முக்கியமா? பெட்ரோல் முக்கியமா? – மத்திய அரசை சாடும் சிவசேனா!
மும்பை (23 பிப் 2021): பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக சிவசேனா கட்சி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து உள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை காட்டி மத்திய அரசை விமர்சித்துள்ள சிவசேனா கட்சி ராமர் கோவில் கட்ட பணம் வசூலிப்பதை காட்டிலும் அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய…