பாஜகவினரிடமிருந்து பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு தேவை – காவல்துறையிடம் மனு!

திருப்பூர் (27 பிப் 2020): பாஜகவினரிடமிருந்து பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு கோரி திருப்பூர் காவல் நிலையத்தில் பிரியாணி கடைக்காரர்கள் மனு அளித்துள்ளனர். சிஏஏ வுக்கு ஆதரவாக பாஜக சார்பில் திருப்பூரில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெறவுள்ளது. பேரணியின்போது, பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு தர கோரி திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் கொல்லப்பட்ட சசிகுமார் என்ற இந்து முன்னணி பொறுப்பாளரின் இறுதி ஊர்வலத்தில் பிரியாணி அண்டா திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து,…

மேலும்...

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நிறுத்த – களத்தில் இறங்கிய மாணவர்கள்!

சேலம் (27 ஜன 2020): சேலம் பாகல்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நிறுத்தக் கோரி மாணவர்கள் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 26 குடியரசு தினவிழாவை முன்னிட்டு நேற்று, நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் அந்தந்த கிராமங்களில் நடைபெற்றன. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பாகல்பட்டி பஞ்சாயத்தில் உள்ள செங்கானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 100-க்கும்…

மேலும்...

பெரியார் விவகாரம் – ரஜினிக்கு எதிரான மனு வாபஸ்!

சென்னை (24 ஜன 2020): பெரியார் குறித்து பேசிய நடிகர் ரஜனிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை திராவிடர் விடுதலைக் கழகம் வாபஸ் பெற்றுள்ளது. கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால்,…

மேலும்...