
கூட்டணியில் இருந்து கொண்டே பாஜக அரசின் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்!
பாட்னா (26 பிப் 2020): பிகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) கணக்கெடுப்புக்கு எதிராக, அந்த மாநில சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பிகாா் சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை காலை கூடியபோது, சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் ஆகியவை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா் ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டுவந்தனா். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, இந்த விவகாரங்கள் தொடா்பாக விவாதிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா். அதற்கு சட்டப் பேரவை விவகாரங்கள்…