தப்லீக் ஜமாஅத் தலைவர் பேசியதாக வைரலான ஆடியோ போலியானது: விசாரணையில் தகவல்!

புதுடெல்லி (09 மே 2020): கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என்பதாக டெல்லி தப்லீக் ஜமாஅத் தலைவர் மவுலானா சாத் காந்தல்வி பேசியதாக வெளியான ஆடியோ போலியானது என விசாரணை முடிவு வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பு டெல்லியில் கூடிய தப்லீக் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் பின்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டவுடன் கலைக்கப்பட்டது. எனினும் கொரோனாவை தப்லீக் ஜமாஅத்தினர்தான் பரப்பினர் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் பரப்பின. மேலும் சமூக ஊடகங்களிலும் போலியான…

மேலும்...

டெல்லி தப்லீக் ஜமாத் தலைவருக்கு கொரோனா இல்லை – பரிசோதனை முடிவுகள் வந்தன!

புதுடெல்லி (27 ஏப் 2020): டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தல்விக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. ஜனவரி மாதம் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா வைரஸ் உள் நுழைந்துவிட்ட போதிலும் மார்ச் மாதமே அது வீரியமானது. இந்நிலையில் கொரோனா பரவ டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக…

மேலும்...

நான் தலைமறைவாக இருந்தேனா? – மனம் திறந்த தப்லீக் ஜமாத் தலைமை இமாம்!

புதுடெல்லி (22 ஏப் 2020): தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை தப்லீக் ஜமாத் தலைமை இமாம் மவுலானா சாத் கந்தல்வி மறுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவ டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் தப்லீக் ஜமாத் நடத்திய ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக அரசும் ஊடகங்களும் மாறி மாறி குற்றச்சட்டுகளை பதிவு செய்த நிலையில், தற்போது அந்த குற்றச் சாட்டுகள் பொய் என்பது தெளிவாகிறது. இந்நிலையில் இச்சம்பவத்திற்கு பிறகு தப்லீக் ஜமாத் தலைமை இமாம் மவுலானா சாத் கந்தல்வி முதன்…

மேலும்...