வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்கும் பிரபல நடிகர்!

திருவனந்தபுரம் (12 மே 2020): வளைகுடாவில் ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகளுக்கு நடிகர் மம்மூட்டி தலைமையில் இலவச விமான டிக்கெட் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தின் பிரபல டிவி சேனலான கைரேலி, இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி வளைகுடாவில் வேலையின்றி, பணமின்றி சிக்கித் தவிக்கும் கேரள ஏழை மக்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்க கைரேலி சேனல் முன் வந்துள்ளது. பிரபல நடிகர் மம்மூட்டி தலைமையில் இத்திட்டம் நிறைவேற்றப் படவுள்ளது….

மேலும்...