குவைத்தில் திடீர் நிலநடுக்கம்!

குவைத் (02 ஆக 2021): வளைகுடா நாடான குவைத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. குவைத்தின் மனகிஷ்(Al-Manaqeesh) பகுதியில் திங்கள் கிழமை காலை 11:31 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில், 4.5 ஆக பதிவாகியுள்ளது. குவைத் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் நில அதிர்வு கண்காணிப்பு பிரிவின் மேற்பார்வையாளர் அப்துல்லா அல் அன்சி கூறுகையில், உள்ளூர் நேரப்படி காலை 11:31 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம் மனகிஷ் பகுதியின் தரைமட்டத்திலிருந்து 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும்,…

மேலும்...

குவைத்தில் சட்ட விரோதமாக 60 வயதுக்கு மேல் இக்காமா புதுப்பித்தது குறித்து விசாரணை!

குவைத் (14 ஜூலை 2021): குவைத்தில் 60 வயதுக்கு மேல் உள்ள வெளிநாட்டவர்களின் உரிமத்தை (இக்காமா) புதுப்பித்த அதிகாரிகளுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளது. குவைத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 157 வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கள் இகாமாவை புதுப்பித்திருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 35 ஊழியர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குவைத்தில் இளங்கலை பட்டம் பெற்ற 60 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு பணி அனுமதி புதுப்பிக்கப்படலாம். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அரிய சிறப்பு கல்வித் தகுதி…

மேலும்...

மிகக் குறைவான வாழ்க்கை செலவை உள்ளடக்கிய நகரம் குவைத்!

குவைத் (07 ஜூலை 2021): வளைகுடா நாடுகளில் மிகக் குறைவான செலவு செய்யக்கூடிய நகரம் என்ற சிறப்பை குவைத் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நம்பியோ இன்டெக்ஸ் என்ற வலைத்தளம் இதுகுறித்த பட்டியல் ஒன்றை வெளியிடும். அது வெளியிட்டுள்ள பட்டியலில் வளைகுடாவில் அதிக வாழ்க்கைச் செலவு கொண்ட நகரங்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரத்திலும் தினசரி தேவைகள் மற்றும் உணவு, செலவு மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவற்றை உள்ளடக்கி இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில்…

மேலும்...

குவைத் இந்திய தூதரகம் மூடல்!

குவைத் (26 ஜூன் 2021): ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அடுத்து, குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூடப்பட்டது. இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு தூதரக செயல்பாடுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை, அவசர காலத் தேவைகளுக்கு மட்டும் முன்பதிவு செய்வதன் அடிப்படையில் தூதரக சேவைகள் செயல்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும்...

முழுமையாக தடுப்பூசி பெற்ற வெளிநாட்டவர்கள் ஆகஸ்ட் 1முதல் குவைத் வர அனுமதி!

குவைத் (18 ஜுன் 2021): முழுமையாக தடுப்பூசி பெற்ற வெளிநாட்டவர்கள் ஆகஸ்ட் முதல் குவைத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குவைத் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பெற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. மெடோனா அஸ்ட்ரா சேனகா மற்றும் ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும், ஜான்சன் & ஜான்சன் ஒரு டோஸையும் பூர்த்தி செய்தவர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் அனுமதி வழங்கப்படும் குவைத் வருவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் நெகட்டிவ்…

மேலும்...

குவைத்தில் வரும் ஞாயிறு முதல் பகுதி நேர ஊரடங்கு!

குவைத் (05 மார்ச் 2021): குவைத் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு மாதத்திற்கு பகுதி நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக இந்த ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தவு அமல்படுத்தப்படும். வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த கூட்டத்தில் வெளிநாட்டினரை குவைத்திற்குள் அனுமதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மேலும்...

குவைத்தில் அனைத்து உணவகங்கள் கடைகள் மூடல்!

குவைத் (04 பிப் 2021): கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக குவைத்தில் உணவகங்கள் மற்றும் கடைகள் இரவு நேரங்களில் மூட உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைவாக இருந்த நிலையில், மீண்டும் அது அதிவேகத்தில் பரவ தொடங்கியுள்ளது. இது மேலும் பரவாமல் தடுக்க வளைகுடா நாடுகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சவூதி அரேபியா இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினர் சவூதிக்குள் வர தற்காலிக தடை…

மேலும்...

சவூதி அரேபியாவைத் தொடர்ந்து குவைத் ஓமான் நாடுகளிலும் சர்வதேச விமானங்களுக்கு தடை!

மஸ்கட் (21 டிச 2020): சவுதி அரேபியாவைத் தொடர்ந்து ஓமான் மற்றும் குவைத் நாடுகளும் சர்வதேச விமானங்களை இன்று முதல் நிறுத்தி வைத்துள்ளன. இங்கிலாந்தில் காணப்படும் புதிய கோவிட் வைரஸ் படு வேகமாகப் பரவி வருவதால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. சவூதி அரேபியா ஒரு வாரத்திற்கு தனது எல்லைகளை மூடியுள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவைத் தொடர்ந்து ஓமான், குவைத் நாடுகளிலும் சர்வதேச விமானங்களை இன்று முதல் நிறுத்தி வைத்துள்ளது.

மேலும்...

வெளிநாட்டுப் பணியாளர்களின் விசா விதிமுறைகளைக் கடுமையாக்கும் குவைத் அரசு!

குவைத் (29 நவ 2020): “அறுபது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வெளிநாட்டுப் பணியாளர்களின் விசாக்களை புதுப்பிக்க வேண்டாம்” என குவைத் அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை அமல்படுத்துவதன் மூலம், 70,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அடுத்த ஆண்டுக்குள் குவைத்திலிருந்து, தத்தம் சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டியிருக்கும். குவைத் நாட்டின் வேலைவாய்ப்பு துறையில் உள்ளூர் மயமாக்கலை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை குவைத் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. இப்…

மேலும்...

குவைத்தில் தனிமைப்படுத்தல் கால அளவில் மாற்றமில்லை – சுகாதார அமைச்சகம் திட்டவட்டம்!

குவைத் (30 அக் 2020): குவைத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் வீட்டு தனிமைப் படுத்தல் கால அவகாசம் 14 நாட்கள் என்பது தொடர்ந்து கடை பிடிக்கப்படும் என்று குவைத் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் மஸ்ராம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கோவிட் தடுப்பூசி விநியோகிப்பதற்கான பிரச்சாரத்தை சுகாதார அமைச்சர் டாக்டர். பாசலில் தெரிவிக்கையில் கோவிட் தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் அதனை வழங்குவதில் முதியவர்கள்,…

மேலும்...