துன்புறுத்தப்படும் பத்திரிகையாளர்களும் பாஜக ஆட்சியும்!

புதுடெல்லி (26 டிச 2020) பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை ‘தி வயர்’ இன்று வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை காட்டுகிறது. இதுகுறித்த அந்த அறிக்கையின்படி, நாட்டில் கொரோனா காலங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 55 பத்திரிகையாளர்கள் 2020 மார்ச் 25 முதல் மே 31 வரை கைது செய்யப்பட்டனர். பல ஊடக ஊழியர்கள் உடல் ரீதியாக தாக்கப்பட்டனர். சொத்துக்கள் , வாகனங்கள் மற்றும் கேமராக்கள் அழிக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில், சித்திக் கப்பன்…

மேலும்...

டெல்லியில் மசூதி மீது தீ வைத்ததை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல்!

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி வன்முறையின்போது மசூதி மீது தீ வைத்த கும்பலை படம் பிடித்த என்டிடிவி செய்தியாளர்கள் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டுள்ளார். டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. இந்த வன்முறையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில்…

மேலும்...