ரம்ஜான் பண்டிகைக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவன்!

சென்னை (15 ஏப் 2020): ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த ரூ 5200 ஐ கொரோனா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் ஏழம் வகுப்பு மாணவர் சல்மான் ஃபாரிஸ். மேற்கு மாம்பலம் கஸ்தூரிபாய் நகர், கல்யாண சுந்தரம் தெருவில் வசிப்பவர், ஏழாம் வகுப்பு மாணவர் சல்மான் ஃபாரிஸ். இவர் அவரது பெற்றோர் அவ்வப்போது வழங்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைத்துள்ளார். எதிர் வரும் ரம்ஜான் பண்டிகைக்காக இந்த பணத்தை அவர் சேர்த்து வைத்ததாக…

மேலும்...

மனித நேயத்தை மிஞ்சியது எதுவும் இல்லை – ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த ஷஹித் அஃப்ரிடி!

இஸ்லாமாபாத் (25 மார்ச் 2020): கொரோனா எதிரொலியாக உணவின்றி பாதிக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹிர் அஃப்ரிடி பலருக்கு உதவி வருகிறார். இந்நிலையில் அஃப்ரிடியின் உதவியை மெச்சிய இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அஃரிடியை பாராட்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில்” உண்மையில் மிக உண்ணதமான சேவையை செய்கிறீர்கள் அஃப்ரிடி. மனிதநேயமிக்க உங்கள் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. உங்களுக்கு இறைவனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும். உலகில் அனைவருக்காகவும் நாம் பிரார்த்திப்போம்”…

மேலும்...

டெல்லி போர்க்களத்தில் கைவிடப்பட்ட இந்து மணப் பெண்ணுக்கு கை கொடுத்த முஸ்லிம் இளைஞர்!

புதுடெல்லி (27 பிப் 2020): டெல்லி வன்முறையின் நடுவே மணமகனால் கை விடப்பட்ட இந்து பெண்ணை முஸ்லிம் இளைஞர் முன்வந்து திருமணம் செய்துள்ளார். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையாளர்கள் நுழைந்ததால் டெல்லி கலவர பூமியானது. இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் டெல்லி சாந்த் பாக் பகுதியில் உள்ள சாவித்ரி பிரசாத் (23) என்ற பெண்ணுக்கும் மற்றொரு இந்து இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்து முறைப்படி செவ்வாய் அன்று…

மேலும்...

சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக்கில் நடைபெற்ற நெகிழ வைக்கும் நிகழ்ச்சி!

சென்னை (26 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை (ஷஹீன் பாக்) போராட்டக் களத்தில் இந்து பெண் ஒருவருக்கு முஸ்லிம் பெண்கள் சீமந்தம் நடத்தி அழகு பார்த்தனர். குடியுாிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் சிஏஏ வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர கோரியும், குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற கோரியும் சென்னை வண்ணாரப்பேடையில் பெண்கள் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சமூகத்தினரும் கலந்து கொண்டு…

மேலும்...