விஐபி ஹஜ் ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு!

புதுடெல்லி (14 ஜன 2023): உயர்மட்ட அரசியலமைப்பு பதவிகள் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சகம் ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு இருக்கும் விஐபி ஹஜ் ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஹஜ்ஜில் விஐபி ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவரவும், விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பிரதமர் மோடி பதவியேற்ற முதல் நாளிலேயே தீர்மானத்தை முன்வைத்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது ஹஜ் தொடர்பாக விஐபி…

மேலும்...

வீடுகளை இடித்த அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாட முஸ்லிம்கள் முடிவு!

போபால் (16 ஏப் 2022): மத்திய பிரதேசத்தில் பாஜக அரசு முஸ்லிம்களின் வீடுகளை இடித்த நிலையில் இதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசம் கார்கோன் நகரில் ராமநவமி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் வன்முறையில் ஈடுபட்டதாக முஸ்லிம்களின் வீடுகளை மட்டும் அரசு இடித்து தள்ளியுள்ளது. இதனால் பலர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். “அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என்று போபால் ஷஹர் காசி…

மேலும்...

புதிய ஆளுநர்கள் நியமனம் -குஷ்பு கொந்தளிப்பு !

சென்னை (07 ஜுலை 2021): எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு இதில் பாகுபாடு இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். எட்டு மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டார். கர்நாடகா, ஹரியானா, திரிபுரா, இமாச்சல் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சமூக நீதித் துறை அமைச்சராக உள்ள தாவர்சந்த் கெலாட் தற்போது கர்நாடகா மாநில ஆளுநராக…

மேலும்...

மத்திய அரசின் திறமையின்மையால் மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி – ப.சிதம்பரம் பாய்ச்சல்!

சென்னை (07 மார்ச் 2020): நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் நிா்வாகத் திறமையின்மையை இந்தப் பிரச்னை வெளிக்காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். வாராக் கடன் பிரச்னையால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியாா் வங்கியான யெஸ் வங்கியை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. வங்கியில் இருந்து ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு…

மேலும்...

பாஜக அரசு தேசவிரோத செயலில் ஈடுபடுகிறது – பாஜக மூத்த தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (27 ஜன 2020): ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்வது முழுக்க முழுக்க தேசவிரோதமானது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 100 % பங்குகளையும், விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பங்குகளை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்க, தனியார் நிறுவனங்களுக்கு வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதியைக் கெடுவாக அறிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கடனில் சிக்கித்…

மேலும்...