அருப்புக்கோட்டை அருகே ஏற்பட்ட கார் விபத்தில் மூவர் பலி!

அருப்புக்கோட்டை (29 பிப் 2020): அருப்புக்கோட்டை அருகே சரக்கு வாகனம், கார் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். அருப்புக்கோட்டை அருகே சரக்கு வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மாரி (55), பழனியம்மாள் (28), விஜயலட்சுமி (32) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் சென்ற மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

மேலும்...

பாதுகாப்பற்ற திரைப்பட படபிடிப்பு தளங்கள் – இதுவரை ஏழுபேர் பலி!

X சென்னை (22 பிப் 2020): சென்னையில் பாதுகாப்பு இல்லாத திரைப்பட படப்பிடிப்புகளால் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏழு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அண்மைக்காலமாக திரைப்பட படப்பிடிப்பில் நிகழும் விபத்துகள், அத்துறையினரை அதிா்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக திரைப்படத்துறையை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 5 லட்சம் தொழிலாளா்கள் உள்ளனா். சென்னையில் ஒரு காலத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை, மாமல்லபுரம் பகுதிகளில் அதிகமாக நடைபெற்ற வெளிப்புற திரைப்பட படப்பிடிப்புகள் இன்று வேறு பகுதிகளுக்கு நகா்ந்துள்ளன. மேலும் வளா்ந்து வரும் தொழில்நுட்பத்தின்…

மேலும்...

திருப்பூர் அருகே பயங்கரம்- பேருந்து கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலி!

சேலம் (20 பிப் 2020): அவிநாசிதேசிய நெடுஞ்சாலையில் கேரள அரசு பேருந்தும்- கண்டெய்னர் லாரியும் மோதிக்கொண்டதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சேலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசு பேருந்தும் கேரளாவில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் அவிநாசி அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 23 பேர் காயமடைந்தனர். அவிநாசி காவல்…

மேலும்...

பேருந்து ஆட்டோ மோதி விபத்து: 26 பேர் பலி!

மும்பை (29 ஜன 2020): மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம் மாலேகான்-தியோலா சாலையில், மேஷி பாட்டா என்ற இடத்தில் நாசிக் நகரில் உள்ள கல்வான் நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும் சாலையோரமாக இருந்த கிணற்றில் விழுந்தன. தகவலறிந்து அங்கு சென்ற…

மேலும்...

நடிகை குணமடைய மோடி பிரார்த்தனை!

புதுடெல்லி (19 ஜன 2020): கார் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நடிகை சபானா ஆஸ்மி குணமடைய பிரதமர் மோடி பிரர்த்திப்பதாக தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை ஷபனா ஆஸ்மியின் கார் லாரி மீது மோதியது. அதன் பின்னர் லாரி டிரைவர் மற்றும் ஷபானா ஆஸ்மியின் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்தநிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை சபானா ஆஸ்மி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தனது…

மேலும்...

கார் விபத்தில் பிரபல நடிகை படுகாயம்!

மும்பை (18 ஜன 2020): கார் விபத்தில் இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி படுகாயம் அடைந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலை கலபூர் டோல் பிளாசா அருகே சென்று கொண்டிருந்த நடிகை ஷபானா ஆஸ்மியின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த ஷபானா ஆஸ்மி,பன்வேலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது கணவர் ஜாவித் அக்தாரும் சென்றுள்ளார். எனினும் அவருக்கு காயம் எதுவும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (சனிக்கிழமை) மாலை 03;30…

மேலும்...

அபுதாபியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறு பேர் பலி!

அபுதாபி (16 ஜன2020): ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுபேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வியாழன் காலை அல் ரஹானா கடற்கரை சாலையில் பெரிய ட்ரக்கும், லாரியும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து போக்குவரத்து காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப் பட்டவர்களை அவசர ஊர்திகள் மூலம் மருத்துவமனைகளூக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களில் ஐந்து பேர்…

மேலும்...

தஞ்சை அருகே கார் மோதி நான்கு பேர் பலி – பொங்கல் தினத்தில் சோகம்!

தஞ்சாவூர் (16 ஜன 2020): தஞ்சாவூர் அருகே கார் மோதியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே வல்லம் புதூர் பகுதியில் ஜெபக்கூடம் உள்ளது. இதில், பொங்கல் திருநாளையொட்டி புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏராளமானோர் வல்லம்புதூரிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு, பின்னர் தஞ்சாவூர் – திருச்சி முதன்மை சாலையிலுள்ள அணுகு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில்…

மேலும்...

சாலை விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மரணம்!

புதுக்கோட்டை (12 ஜன 2020): புதுக்கோட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் (31) கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி…

மேலும்...