டிசம்பர் 6 தலித் இஸ்லாமியர் எழுச்சி நாள் – திருமாவளவன் அறிக்கை!

சென்னை (06 டிச 2022): டிசம்பர் 6 ஐ தலித் இஸ்லாமிய எழுச்சி நாளான இன்று சகோதரத்துவத்துவத்தை வளர்த்தெடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது, இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: *திசம்பர் -06, புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாளில்*, அவர் புதிய இந்தியாவைக் கட்டமைத்திட ஆற்றியுள்ள அவரது அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அத்துடன், சனாதன சங்பரிவார்களால் பாபர் மசூதி…

மேலும்...

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது திருமாவளவன் ஒழுங்கு நடவடிக்கை!

சென்னை(01 டிச 2022): விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மணிமாறன் மீது விசிக தலைவர் திருமாவளவன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டம்(தெற்கு) இலத்தூர் வடக்குஒன்றியச் செயலாளர் திரு.மணிமாறன் அவர்கள் கட்சியின் நன்மதிப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் மூன்றுமாத காலத்திற்கு அப்பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும்...

தமிழக பாஜக தலைவராக தலித்தை நியமித்தது ஏன்? – திருமாவளவன் பகீர் கேள்வி!

சென்னை (23 மே 2020): தமிழக பாஜக தலைவராக தலித் சமூகத்தை சேர்ந்த முருகனை நியமித்தது ஏன்? என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தலித் சமூக மக்களுக்காக போராடி வருவது அனைவரும் அறிந்ததே. சமீபகாலமாக திமுக தலைவர்கள் பேசும் சில பேச்சுக்கள் தலித் சமூகத்தினரின் மனம் நோகும்படி உள்ளது. இந்நிலையில்தான் தலித் சமூகத்தினரை இழிவாகப் பேசியதாக கூறி திமுக ஆர்.எஸ் பாரதி சனிக்கிழமை அன்று கைதாகி…

மேலும்...

நீக்கப்படுவாரா தயாநிதி மாறன் – புயலை கிளப்பும் விவகாரம்!

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தலைமைச் செயலகத்தில் கிளப்பிய சலசலப்பு அலை இப்போதைக்கு ஓயாது போல! தயாநிதியைவிடவும் இதில் அதிகமாக சிக்கிக் கொண்டு, பழி சுமப்பவர் திருமாவளவன். திமுக.வுக்காக திருமாவளவன் பாரம் சுமப்பது இது முதல் முறையல்ல. 2009 ஈழ இறுதிப் போர் காலத்தில், அவர் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தது, கலைஞர் வற்புறுத்தலால் ராஜபக்‌ஷேவை சந்திக்கச் சென்ற குழுவில் இடம் பெற்றது, அதன் மூலமாக திமுக மீதான விமர்சனங்களுக்கு கேடயமாக தன்னை ஒப்படைத்தது,…

மேலும்...

திமுக எம்பிக்கள் மீது திருமாவளவன் பாய்ச்சல்!

சென்னை (14 மே 2020): திமுக எம்பிக்களின் பேச்சு தம்மை சார்ந்தவர்களை புண்படுத்தியதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவின் “ஒன்றிணைவோம் வா” என்ற முக்கிய நிகழ்ச்சி மூலம், கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த மனுக்களை அரசிடம் ஒப்படைத்து – அதன்மீது நடவடிக்கை எடுக்க வைத்துதிமுக சார்பில் மனுக்களை அளிக்க தலைமைச் செயலாளர் அவர்களை திமுக எம்பிக்கள் சந்தித்து பேசியபோது, தலைமை செயலர் வித்தியாசமாக நடந்து கொண்டதாக திமுக எம்பிக்கள் குற்றம் சட்டியுள்ளனர். அதில், “நாங்கள்…

மேலும்...

பொய் சொல்லவும் ஒரு திறன் வேண்டும் – அமித் ஷாவை விளாசிய விசிக எம்பி ரவிகுமார்!

சென்னை (29 பிப் 2020): “குடியுரிமைச் சட்டம் முஸ்லிம்களை பாதிக்காது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுவது பச்சை பொய்” என்று விசிக எம்பி ரவிகுமார் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்று இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை…

மேலும்...

திருச்சி மாநாட்டில் திருமாவளவன் திமுக மீது மறைமுக பாய்ச்சல்!

திருச்சி (23 பிப் 2020): விடுதலை சிறுத்தைகள் கட்சி விரைவில் கோட்டையில் கொடியேற்றும் என்றும் திமுகவுக்கு பல மெஸேஜ்களையும், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று நடைபெற்ற தேசம் காப்போம் என்ற பெயரில் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை கண்டித்து தேசம் காப்போம் என்ற பெயரில் நேற்று திருச்சியில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. அதில் பேசிய திருமாவளவன், திமுகவுக்கு பல மறைமுக மெஸேஜ்களை தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெறுமனே கோஷம்…

மேலும்...

திருச்சி CAA எதிர்ப்பு பேரணிக்கு முஸ்லிம் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை – திருமாவளவன் அறிவிப்பு!

திருச்சி (19 பிப் 2020): விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி தேசம் காப்போம் பேரணி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பு போலீஸ் அனுமதி கிடைக்காத நிலையில் தற்போது அனுமதி கிடைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த பேரணி பிற்பகல் 2 மணிக்கு மாற்றப்படுள்ளதாக தெரிவித்த திருமாவளவன், இப்பேரணியில் பங்கேற்க தோழமை கட்சிகளுக்கோ, இஸ்லாமிய அமைப்புகளுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் முழுமையக விடுதலை சிறுத்தைகள்…

மேலும்...