ஒரே விசாவில் இனி ஒட்டு மொத்த வளைகுடா பயணிக்கலாம்!

தோஹா, கத்தார் (09 நவம்பர் 2023):  வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இனி கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு ஒரே விசாவில் பயணிக்க முடியும். வளைகுடா ஒத்துழைப்பு சபையில் (Gulf Cooperation Council) உள்ள ஆறு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்ற GCC உள்துறை அமைச்சர்களின் 40வது கூட்டத்தின்போது GCC-இன் பொதுச்செயலாளர் ஜாசிம்…

மேலும்...

சவுதி விசாவிற்கு இந்தியர்களுக்கு இனி போலீஸ் கிளியரன்ஸ் தேவையில்லை!

ரியாத் (17 நவ 2022): சவூதி அரேபியாவுக்கு புதிய வேலைவாய்ப்பு விசாக்களை முத்திரை குத்துவதற்கு டெல்லியில் உள்ள சவுதி தூதரகம் விதித்த போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் இனி அவசியமில்லை. முந்தைய இந்த உத்தரவை இந்தியாவில் உள்ள சவூதி தூதரகம் திரும்பப் பெற்றுள்ளது. சவுதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதுதில்லியில் உள்ள சவுதி தூதரகம் ட்வீட் செய்துள்ளது. மேலும் சவூதி அரேபியாவில் மகிழ்ச்சியுடன் வாழும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான…

மேலும்...

சவூதி அரேபியாவிலிருந்து விடுமுறையில் சென்ற வெளிநாட்டவர்களின் இக்காமா மற்றும் விசா காலாவதி காலம் மீண்டும் இலவச நீட்டிப்பு!

ரியாத் (28 நவ 2021): சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறையில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினரின் விசா மற்றும் இக்காமா காலாவதி காலம் வரும் ஜனவரி 2022 31 ஆம் தேதி வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 31 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் விசாக்கள் ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்கப்படும். சவூதிக்கு வர முடியாமல் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான்…

மேலும்...

காலாவதியான துபாய் விசா காலம் நீட்டிப்பு!

துபாய் (12 ஆக 2021): ஐக்கிய அரபு எமிரேட்சீல், வெளிநாட்டவர்களின் காலாவதியான விசா காலம் நவம்பர் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விசா காலாவதியாகி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் நவம்பர் 9 க்குள் துபாய் திரும்ப வேண்டும் என்று விசா சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல எமிரேட்ஸ் இணையதளத்தில் உள்ளபடி, சுற்றுலா விசா வைத்திருப்பவர்களும் துபாய்க்கு வரலாம். அதேபோல வேலை மற்றும் குடியுரிமை விசாக்களுக்கு பொருந்தும் நிபந்தனைகள் சுற்றுலா விசாக்களுக்கும் பொருந்தும் என்று எமிரேட்ஸ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்...

இந்தியர்கள் கத்தாருக்குச் செல்ல விசா வழங்கும் பணி துவக்கம்!

கத்தார் (ஜூலை 5): கொரோனா பரவல் காரணமாக, நெடுங்காலமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இந்தியர்களுக்கான விசாக்கள் வழங்கும் பணி, இன்று முதல் கத்தாரில் துவங்கியது. இதன்மூலம், கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் குடும்பத்தினரை கத்தாருக்கு வரவழைக்கும் வண்ணம் ‘ரெஸிடென்ஸ் விசாக்கள்’ இன்றுமுதல் வழங்கப்படும். Metrash2 எனப்படும் கத்தர் அரசின் ஆப் வழியே மிக எளிதாக இந்த விசா பெற எவரும் விண்ணப்பிக்கலாம். இச்செய்தி, இந்தியர்களிடையே மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.    

மேலும்...

வெளிநாட்டுப் பணியாளர்களின் விசா விதிமுறைகளைக் கடுமையாக்கும் குவைத் அரசு!

குவைத் (29 நவ 2020): “அறுபது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வெளிநாட்டுப் பணியாளர்களின் விசாக்களை புதுப்பிக்க வேண்டாம்” என குவைத் அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை அமல்படுத்துவதன் மூலம், 70,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அடுத்த ஆண்டுக்குள் குவைத்திலிருந்து, தத்தம் சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டியிருக்கும். குவைத் நாட்டின் வேலைவாய்ப்பு துறையில் உள்ளூர் மயமாக்கலை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை குவைத் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. இப்…

மேலும்...

இந்தியாவில் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விசாக்களும் ரத்து!

புதுடெல்லி (06 மே 2020): இந்தியா வருவதற்காக வெளிநாட்டினருக்‍கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விசா அனுமதிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், தூதரகப் பணிகள், அலுவல்பூா்வ பணிகள், ஐ.நா.சா்வதேச அமைப்புகளின் பணிகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில பிரிவுகள் தவிர, இதர பிரிவுகளில் வழங்கப்பட்டிருந்த அனைத்து விசா அனுமதிகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கும் வரை இந்த விசா அனுமதி ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரம்,…

மேலும்...

இனி விசா வழங்கப்பட மாட்டாது – அமெரிக்க அதிபர் திடீர் உத்தரவு!

வாஷிங்டன் (12 ஏப் 2020): அமெரிக்காவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டினரை உடனடியாக அழைத்துக் கொள்ள வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். விசா தடைகள் தொடர்பாக டிசம்பர் 31 வரை நடைமுறையிலுள்ள வகையிலான அறிவிப்பை வெளியிட்டுள்ள டிரம்ப், தங்கள் குடிமக்களைத் திரும்ப அழைக்க மறுத்தாலோ அல்லது காரணமின்றித் தாமதித்தாலோ அந்த நாடுகள், அமெரிக்காவுக்குப் பெரும் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் எனக் குறிப்பிட்டுள்ளா். மேலும் அமெரிக்காவிலுள்ள தங்கள் நாட்டுக் குடிமக்களைத்…

மேலும்...