அபராதத்தைச் செலுத்தாமல் பயணிக்க முடியாது - கத்தாரில் புதிய விதிமுறை

அபராதத்தைச் செலுத்தாமல் பயணிக்க முடியாது – கத்தாரில் புதிய விதிமுறை

தோஹா, கத்தார் (23 மே 2024): கத்தார் நாட்டில் வசிப்போருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை, கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் போக்குவரத்து பொது இயக்குநரகம் இன்று புதிய விதிமுறை-யாக வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி 2024 முதல் சாலை, விமானம் மற்றும் கடல் மார்க்கமாக கத்தாரில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணிப்போர் மீதான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் ஏதும் பெற்றிருந்தால் அதனை முழுமையாகச் செலுத்தாமல் பயணிக்க இயலாது என்று  அறிவித்துள்ளது. (இந்நேரம்.காம்) உள்துறை அமைச்சகத்தின் செய்தியாளர்…

மேலும்...
பைக் ஸ்டண்ட் வைரல் வீடியோ

சாலையில் ஸ்டண்ட் காட்டிய பைக் நசுக்கி அழிப்பு! (வீடியோ)

தோஹா, கத்தார் (15 டிசம்பர் 2023):  கத்தார் நாட்டில் சாலைகளில் அனுமதியின்றி மோட்டார் பைக் ஸ்டண்ட் செய்து ஹீரோயிஸம் காட்டிய நபர் கைது செய்யப் பட்டார்.  அத்துடன், அவரது மோட்டார் பைக்கும் நசுக்கி அழிக்கப்பட்டது. தனது உயிருக்கும், சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் செய்ததற்காக, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வைரல் வீடியோ: கத்தாரில் கடந்த சில நாட்களாக சமூக வலைத் தளங்களில்…

மேலும்...

சவூதியில் வாகனம் ஓட்டுபவர்களே எச்சரிக்கை!

ரியாத் (13 பிப் 2020): சாலைகளில் ஆங்காங்கே கேமராக்கள் பொறுத்தி சவூதி போக்குவரத்து கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சவூதியில் விபத்துக்களை குறைக்கும் வகையில் பல சாலைகளில் புதிய கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவோ, அல்லது உரிமம் ரத்துச் செய்யப்படவோ வாய்ப்பு உள்ளது. மேலும் தான் செல்லும் ட்ராக்கை அவசியமில்லாமல் விதிகளை மீறி மாறினாலும் கேமரா கண்டுபிடித்து எச்சரித்துவிடும். இதனால் வாகனம் ஓட்டுபவர்கள் அதிக அபராதங்கள் செலுத்த வாய்ப்பு உள்ளது. எனவே வாகனம்…

மேலும்...

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு நீதிபதி வழங்கிய வேற லெவல் தண்டனை!

திருச்சி (24 ஜன 2020): திருச்சியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு நீதிபதி புதுவிதமான தண்டனை வழங்கி உத்தரவிட்டார். திருச்சி கே.கே நகரைச் சேர்ந்த பாலமுருகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரர் மற்றும் நண்பர்கள் ஐந்து பேருடன் மதுபோதையில் வாகனத்தை ஓட்டினார். இவரை போக்குவரத்து போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் அபராதமும் விதித்தனர். 2018-ஆம் ஆண்டு பாலமுருகனுக்கு 17 வயது என்பதால் இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பயிற்சி வகுப்பில் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டது….

மேலும்...