தன் வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய பஜக நிர்வாகி!

ஈரோடு (24 ஜன 2023): ஈரோடு அருகே தன் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய பாஜக நிர்வாகி சண்முகம் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கணபதிபாளையம் மாணுவக்காடு போயர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (43). இவர் விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு அய்யம்மாள் (39) என்ற மனைவியும், விக்னேஷ் (15), அடல் பிகாரி வாஜ்பாய் (13), ராஜேஸ் (10) என்ற மகன்களும் உள்ளனர். சண்முகம் தேவேந்திர குல வேளாளர் மோடி பாசறையின்…

மேலும்...

பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கும்பகோணம் (02 டிச 2022): தனது வீட்டுக்கு தானே வெடிகுண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோயில் தெருவில் கடந்த மாதம் 21ம் தேதி காலை சக்கரபாணி என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கும்பகோணத்தில் தனது பெயர் பரபரப்பாகப் பேச வேண்டும் என்பதற்காகச் சொந்த வீட்டிலேயே சக்கரபாணி பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில்…

மேலும்...

தனது வீட்டுக்கு தானே வெடிகுண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது!

கும்பகோணம் (22 நவ 2022): தனது வீட்டுக்கு தானே வெடிகுண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம், மேலக்காவேரி, காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி (38) கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மாலதி (37) மகன் இனியன் (11). சக்கரபாணி இந்து முன்னணி மாநகர செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சக்கரபாணி மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அவருடைய வீட்டு வாசலில் வீசப்பட்ட கண்ணாடி பாட்டில் உடைந்து சிதறி…

மேலும்...

கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக இருவர் கைது!

கோவை (25 செப் 2022): கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் மாநகர பாஜக அலுவலகம் மீது சில நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசினர். அதைத்தொடர்ந்து கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டது. கோவை மட்டுமல்லாது மாநிலத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட…

மேலும்...

பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீடுகளில் தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு!

கோவை (25 செப் 2022): தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் பா.ஜ. க, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடு, வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி, தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு காரணமாக கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 4,000க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஈரோடு, திண்டுக்கல், ராமநாதபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், நேற்று இரண்டாவது நாளாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இதன்…

மேலும்...

சென்னை பாஜக தலைமை அலுவலக குண்டு வெடிப்பில் தொடர்புடைய வினோத் என்பவர் கைது!

சென்னை (10 பிப் 2022): சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ளது பாஜக தலைமை அலுவலகம். நேற்றிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. காவல் துறையினர்…

மேலும்...

டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

புதுடெல்லி (22 மார்ச் 2020): குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடைபெறும் பகுதியின் அருகில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி கேட்டுக் கொண்டபடி மக்கள் ஊரடங்கு நாடுமுழுவதும் இன்று காலை 7 மணி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்கள் எவ்வித போக்குவரத்துமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன. மக்கள் ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில கட்டுப்பாடுகளுடனும்…

மேலும்...

கோவையில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

கோவை (05 மார்ச் 2020): கோவையில் மசூதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- இன்று (வியாழன்)காலை கணபதி வேதம்பாள் நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் எந்தவித உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை. பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை விரைந்து கைது…

மேலும்...

மதுரையில் பயங்கரம் – மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு!

மதுரை (29 ஜன 2020): மதுரையில் மளிகைக் கடைக்காரரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு மேலும் பெட்ரோல் குண்டைவ்யும் வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அனுப்பானடி சின்னகன்மாய் பகுதியை சேர்ந்த கனேசன் என்பவரது மளிகைக் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு, கடைக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடைபெற்று…

மேலும்...

குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றவர்கள் கைது!

சென்னை (27 ஜன 2020): சென்னை மயிலாப்பூரில் ‘துக்ளக்’ ஆசிரியா் குருமூா்த்தி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா். மயிலாப்பூா் தியாகராஜபுரத்தில் வசிக்கும் ‘துக்ளக்’ ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி வீட்டின் அருகே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 இருசக்கர வாகனங்களில் 6 போ் வந்தனா். அதில் ஒரு நபா், தனது பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசுவதற்கு எடுத்துள்ளாா். அப்போது அங்குள்ள நாய் பலமாகக் குரைத்ததால், பாதுகாப்பு பணியில் இருந்த…

மேலும்...