பிரபல தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை (17 ஆக 2021): பிரபல தொலைகாட்சி தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் நேற்று இரவு காலமானார். சன் மியூசிக்கில் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன்.வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளராக இருந்த இவர் 90ஸ் கிட்களின் பேவரைட் விஜேவாக இருந்தவர். நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். சித்துபாத் உள்ளிட்ட சீரீயலில் நடித்த ஆனந்த கண்ணன் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு…

மேலும்...

நுரையீரல் புற்றுநோய் மருந்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்!

துபாய் (20 ஜூன் 2021): நுரையீரல் புற்றுநோய்க்கான புதிய மருந்தை ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகரித்துள்ளது. நுரையீரல் புற்றுநோய்க்கு புதிதாக உருவாக்கப்பட்ட லுமக்ராஸ் என்ற மருந்துக்கு ஐக்கிய அரபு அமீரக சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்துக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு அமெரிக்காக. இரண்டாவது நாடு ஐக்கிய அரபு அமீரகம். இந்த வாய்வழியாக செலுத்தும் மருந்து புற்றுநோய் சிகிச்சைக்கு உட்பட்ட வயதுவந்த நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக, கோவிட்டுக்கு எதிரான உலகின் முதல் மருந்தான சோட்ரோவிமாப்…

மேலும்...

இந்தியாவில் அதிகரிக்கும் புற்று நோய் – ஐ.சி.எம்.ஆர். அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி (19 ஆக 2020): இந்தியாவில் புற்று நோய் பாதிப்பு கடந்த 4 ஆண்டுகளில் 10 சதவீதம் உயர்ந்திருப்பதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுளாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர் மற்றும் நோய்கள் தொடர்பான தகவல் திரட்டும் தேசிய மையம் இணைந்து நடத்திய ஆய்வில் 2020ம் ஆண்டில் 13.9 லட்சம் நபர்கள் புற்றுநோய் தொற்றுக்கு ஆளாவார்கள் என்றும் இது 2025ம் ஆண்டில் 15.7 லட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்...

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்!

மும்பை (25 மே 2020): பிரபல இந்தி மற்றும் பெங்காலி நகைச்சுவை நடிகர் மோஹித் புற்று நோயால் உயிரிழந்தார். கடந்த ஆறு மாதங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சையை மோஹித் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவருடைய உடலில் நோய் தீவிரமடைந்ததால், சனிக்கிழமை, மதுராவில் இருக்கும் அவரது இல்லத்தில் மோஹித் உயிர் பிரிந்தது. உவா’, ‘மிலன் டாக்கீஸ்’ சல்மான் கானுடன் ‘ரெடி’, பரினீதி சோப்ராவுடன் ‘ஜபாரியா ஜோடி’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் மோஹித். ராணி முகர்ஜி,…

மேலும்...

சென்னையில் கொரோனா பாதித்த புற்று நோயாளிகள் குணமடைந்தனர்!

சென்னை (14 மே 2020): சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் புற்று நோய் பாதித்தவர்கள் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளில் பலர் எவ்வித தீவிர விளைவுகளும் இன்றி குணமடைந்து வீடு திரும்பியவர்கள் அதிகம். அதில் குறிப்பாக வயதானவர்களுக்கும், ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு நோய் தீவிர தன்மையடைந்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருந்தது. அதில் குறிப்பாக இதுவரை 22 புற்றுநோய்…

மேலும்...

இந்தி நடிகர் ரிஷிகபூர் மரணம்!

மும்பை (30 ஏப் 2020): புற்று நோய் பாதிப்பு காரணமாக பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் காலமானார் கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோய் சம்பந்தமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் சிகிச்சை பெற்று 2019-ம் ஆண்டு நாடு திரும்பினார். இந்நிலையில்நேற்று இரவு இவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து உடல் சோர்வடைந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் மும்பை எச்.என்.ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு புற்றுநோய் சம்பந்தமான நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருளுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும்,…

மேலும்...

புற்று நோய் மற்றும் மூச்சு திணறல் காரணமாக பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை (30 ஏப் 2020): புற்று நோய் பாதிப்பு காரணமாக பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோய் சம்பந்தமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் சிகிச்சை பெற்று 2019-ம் ஆண்டு நாடு திரும்பினார். இந்நிலையில்நேற்று இரவு இவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து உடல் சோர்வடைந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் மும்பை எச்.என்.ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு புற்றுநோய் சம்பந்தமான நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டாக்டர்கள் ரிஷி கபூருக்கு சிகிச்சைஅளித்து…

மேலும்...

புற்றுநோய்க்கு உதவி கேட்ட பாஜக பிரமுகர் – உடனே உதவுவதாக அறிவித்த திமுக எம்பி!

சென்னை (06 மார்ச் 2020): தனது உறவினரின் புற்று நோய் சிகிச்சைக்கு உதவி கேட்ட பாஜக பிரமுகருக்கு திமுக எம்பி செந்தில்குமார் உதவி செய்ய முன்வந்துள்ளார். பாஜக பிரமுகரும், ட்விட்டரில் அதிமுக எம்பி செந்தில்குமாருடன் கருத்துப் போரில் ஈடுபடுபவருமான எல்.ஜி.சூர்யா என்பவர் நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவொன்றை இட்டிருந்தார். அதில், என் நண்பரின் அம்மாவிற்கு முஸினஸ் கார்சினோ வகை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அவரின் பெயர் பிரேமலதா. பிரேமலதா அம்மா தற்போது கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிகிச்சை…

மேலும்...