ஹிஜாப் தடை – நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரியில் போராட்டம்!

சென்னை (16 மார்ச் 2022): ஹிஜாப் தடை குறித்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக கல்வி நிறுவனங்களில் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உத்தரவை எதிர்த்து கோசங்களை எழுப்பினர். இதனால் அங்கு காவல்துறை குவிக்கப்பட்டது.

மேலும்...