திரிணாமுல் காங்கிரஸில் இணையும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன்!

கொல்கத்தா (05 ஜூலை 2021): முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி திரிணாமுல் காங்கிரசில் இணையவுள்ளார். மேற்கு வங்கத்தின் ஜாங்கிபூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனுமான அபிஜித் முகர்ஜி, கடந்த சில வாரங்களாக டி.எம்.சி தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முன்னதாக முகர்ஜி கடந்த மாதம் டி.எம்.சி தலைவர் அபிஷேக் பானர்ஜியை சந்தித்தார். இதனை அடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் டிஎம்சியில் இணையவுள்ளதாக…

மேலும்...

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம்!

புதுடெல்லி (31 ஆக 2020): முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 84 வது வயதில் அவரது உயிர் பிரிந்தது. பிரணாப் முகர்ஜி கடந்த 9-ந்தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். எனவே அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அதை அகற்றினர். ஆனால் ஆபரேஷனுக்குப்…

மேலும்...

பிரணாப் முகர்ஜி உடல் நிலை – ராணுவ மருத்துவமனை தகவல்!

புதுடெல்லி (27 ஆக 2020): முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நிலைய்யில் முன்னேற்றம் இல்லை என்றும் அவர் ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாகவும் டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. பிரணாப் முகர்ஜி, கடந்த 9-ந்தேதி உடல்நலக்குறைவால் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பிரணாப் முகர்ஜி நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை…

மேலும்...

பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை குறித்து ராணுவ மருத்துவமனை தகவல்!

புதுடெல்லி (20 ஆக 2020): முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த வாரம் பிரணாப் முகர்ஜி (84) மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றபோது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவருக்கு மூளையிலிருந்த ரத்த உறைவு காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே…

மேலும்...

முன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

புதுடெல்லி (10 ஆக 2020): முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவரது ட்விட்டரில் கூறியிருப்பதாவது; “உடல் பொதுவான சோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த நிலையில் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் “கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு…

மேலும்...