பிரபல திரைப்பட இயக்குநர் மரணம்!

மும்பை (21 ஜூலை 2020): பிரபல பாலிவுட் இயக்குநர் ரஜத் முகர்ஜி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ரஜத் முகர்ஜிக்கு சில மாதங்களாக உடல் நல பாதிப்பு இருந்தது. சிறுநீரக பிரச்சினையாலும் அவதிப்பட்டார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பி ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்….

மேலும்...