காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே மோதல்!

ஸ்ரீநகர் (01 நவ 2020): ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே ஏற்பட்ட மோதலில் ஹிஜ்புல் முஜாஹிதின் பயங்கரவாத தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ரீநகரில் உள்ள ரங்கிரெட்டி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது இந்த மோதல் நடந்துள்ளது. போலீசாரின் தேடலின் போது ஏ.கே .47 துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டன.சிஆர்பிஎஃப் மற்றும் காவல்துறை கூட்டாக இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து…

மேலும்...

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தமிழக வீரர் உட்பட மூவர் பலி!

ஸ்ரீநகர் (05 மே 2020): வடக்கு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அஸ்வானி குமார் யாதவ், 31, சி.சந்திரசேகர், 31, சந்தோஷ்குமார் மிஸ்ரா,35 என உயிர் நீத்த மூவரும் சிஆர்பிஎப் -ன் 92 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள். . இதில்,சி.சந்திரசேகர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே இருக்கும் மூன்றுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சந்திரசேகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளன ….

மேலும்...

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!

ஜம்மு (22 பிப் 2020): ஜம்மு காஷ்மீரின் பிஜ்பேஹரா அருகே சங்கம் பகுதியில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை. ஜம்மு பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்பினரிடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், வெடி மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும்...

காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் – ஒருவர் பலி!

புல்வாமா (09 பிப் 2020): காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 55 வயது குலாம் நபி மிர் என்பவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் குலாம் நபி மிர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஞாயிறு (09 பிப்) மாலை 07:30 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த குலாம் நபி மிர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த…

மேலும்...

குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐந்து பேர் கைது!

ஸ்ரீநகர் (17 ஜன 2020): குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக ஐந்து பயங்கரவாதிகள் ஸ்ரீநகரில் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வியாழனன்று பதிவிட்டுள்ளதாவது: குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய ஜெய்ஷ் அமைப்பின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹசரத்பால் பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமானவர்கள் கண்டறியபட்டுள்ளனர். ஹசரத்பால் சதார்பால் பகுதியைச் சேர்ந்த அய்ஜாஸ் அஹமத் ஷேக், அசார் காலனி பகுதியைச்…

மேலும்...

காஷ்மீரில் மூவர் சுட்டுக் கொலை!

புல்வாமா (12 ஜன 2020): காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.. இந்நிலையில், இன்று புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் உள்நுழைந்ததாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப்படையினர் அவ்விடத்திற்குச் சென்றனர். தொடர்ந்து, பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

மேலும்...