பஜ்ரங்தள் போராட்டத்தில் முஸ்லீம் கடை சூறை!

ஷிவமொக்கா (04 ஜூலை 2022): கர்நாடகா ஷிவமொக்கா மாவட்டத்தில் நடந்த பஜ்ரங்தள் போராத்தின்போது முஸ்லீம் ஜவுளிக்கடை போராட்க்காரர்களால் சூறையாடப்பட்டுள்ளன. உதைப்பூர் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங்தள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர் இந்நிலையில் கர்நாடகா பத்ரவ்தி தாலுகாவில் உள்ள ஒரு முஸ்லிம் ஜவுளிக் கடை,யில் புகுந்த போராட்டக்காரர்கள் கண்ணாடிகளை உடைத்து துணிகளை வெளியே எறிந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்...

ஹலால் அல்லாத கோழிக்கறி கோரி முஸ்லிம் வியாபாரிகள் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல்!

பெங்களூரு (31 மார்ச் 2022): ஹலால் அல்லாத கோழிக்கறி கேட்டு முஸ்லிம் வியாபாரி மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஹிஜாப் விவகாரத்திற்குப் பிறகு கர்நாடகாவில் இந்துத்துவாவினர் பல்வேறு விதமாக முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவிலுக்கு அருகில் முஸ்லீம் வியாபாரிகளுக்கு தடை விதித்தனர். தற்போது ஹலால் இறைச்சி விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். இந்நிலையில் ஹலால் கோழிக்கறி கோரி முஸ்லிம் வியாபாரிகளை அடித்து உதைத்த சம்பவம் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஷிவமொகா பகுதியில் பஜ்ரங் தள் குழுவினர்…

மேலும்...

முஸ்லிம்களிடம் இறைச்சி வாங்க வேண்டாம் – இந்துக்களுக்கு பஜ்ரங்தள் அழைப்பு!

பெங்களூரு (30 மார்ச் 2022): கர்நாடகாவில் முஸ்லிம் வியாபாரிகளிடம் இறைச்சி வாங்க வேண்டாம் என பஜ்ரங்தளம் இந்துக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பெங்களூருவில் நடந்த நீலமங்கல உகாதி கண்காட்சியில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் இந்து விற்பனையாளர்களைச் சந்தித்து முஸ்லிம் வியாபாரிகளிடம் இறைச்சி வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் கன்னடத்தில் அச்சிடப்பட்ட அறிவிப்பை பலருக்கும் பஜ்ரங்தள அமைப்பினர் விநியோகித்து வந்தனர். ஹிஜாப் தடையால் கர்நாடகாவில் இஸ்லாமிய வெறுப்பு தலைவிரித்தாடுகிறது. அங்கு முஸ்லிம்கள் கோவில் திருவிழாக்களில் வியாபாரம் செய்ய முடியாத…

மேலும்...