பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரிய மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

புதுடெல்லி (11 அக் 2022): பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரிய மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என மனுதாரர்களை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த மனு 32வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று மனுதாரரை எச்சரித்தார்.

மேலும்...

மாட்டுக்காக 5 பேரை கொலை செய்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ – வைரல் வீடியோ!

ஜெய்ப்பூர் (21 ஆக 2022)’ ராஜஸ்தானின் முன்னாள் பாஜக எம்எல்ஏ கியான்தேவ் அஹுஜா, 5 பேரை கொலை செய்துள்ளதாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து சக நண்பர்களிடம் அவர் பேசும் வீடியோவில் “பசுக் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரைக் கொன்றதாக பெருமையாக கூறுகிறார். இந்த வாக்குமூலம் வீடியோ ஆதாரத்துட ன் சிக்கியதை அடுத்து அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வீடியோவை எதிர் கட்சி பிரமுகர்கள் பாகிர்ந்து அவர் மீது உரிய…

மேலும்...

குர்பானிக்காக பசுவை பலியிட வேண்டாம் – ஜாமியத் உலமா கோரிக்கை

கவுஹாத்தி (05 ஜூலை 2022): பக்ரீத் பண்டிகையின்போது முஸ்லிம்கள் பசுவை பலியிட வேண்டாம்” என, ‘ஜாமியத் உலமா’வின் அசாம் பிரிவு அறிவித்துள்ளது. இதுகுறித்து, அதன் தலைவர் பதுருதீன் அஜ்மல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஹிந்துக்கள் பசுவை புனிதமாக மதிக்கின்றனர் என்பதால் அவர்களின் உணர்சுகளுக்கு மதிப்பளித்து, பக்ரீத் பண்டிகையின் போது, பசுமாட்டை பலியிடுவதை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். அதற்கு பதிலாக ஆடு, எருமை, ஒட்டகம், காளை ஆகியவற்றை பலியிட்டு ‘குர்பானி’ கொடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும்...

மாட்டுக்கறிக்காக பசுவை விற்ற கோவில் தலைவர் மீது வழக்குப்பதிவு!

ஐதராபாத் (26 மார்ச் 2022): பசுவை இறைச்சிக்காக விற்ற கோவில் தலைவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் கோமட்வாடியில் அமைந்துள்ள போச்சம்மா கோயிலின் தலைவர் டி.பிரேம் குமார் எனப்வர், கோயிலின் பசுவை அங்குள்ள உள்ள இறைச்சிக் கூடத்துக்கு விற்றுள்ளார். இந்த குற்றத்தில் குழு உறுப்பினர் எட்லா மகேந்தர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அகில பாரத கௌ சேவா அறக்கட்டளையின் பிரதிநிதி ஏ.பால கிருஷ்ணா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் டபீர்புரா…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்!

லக்னோ (16 நவ 2021): உத்தரபிரதேசத்தில் பசுக்களுக்காக சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை அரசு தொடங்கியுள்ளது. மோசமான நிலையில் உள்ள பசுக்களுக்காக இந்த சேவை தொடங்கப்படும் என்று விலங்குகள் நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயண் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாக 515 ஆம்புலன்ஸ்கள்யஆரம்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் டிசம்பரில் அமலுக்கு வரும். அவசரகால இலக்கமான 112க்கு ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம் என்று அமைச்சர் கூறினார். மேலும் அழைப்பு வந்த…

மேலும்...