குர்பானிக்காக பசுவை பலியிட வேண்டாம் – ஜாமியத் உலமா கோரிக்கை

கவுஹாத்தி (05 ஜூலை 2022): பக்ரீத் பண்டிகையின்போது முஸ்லிம்கள் பசுவை பலியிட வேண்டாம்” என, ‘ஜாமியத் உலமா’வின் அசாம் பிரிவு அறிவித்துள்ளது. இதுகுறித்து, அதன் தலைவர் பதுருதீன் அஜ்மல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஹிந்துக்கள் பசுவை புனிதமாக மதிக்கின்றனர் என்பதால் அவர்களின் உணர்சுகளுக்கு மதிப்பளித்து, பக்ரீத் பண்டிகையின் போது, பசுமாட்டை பலியிடுவதை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். அதற்கு பதிலாக ஆடு, எருமை, ஒட்டகம், காளை ஆகியவற்றை பலியிட்டு ‘குர்பானி’ கொடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும்...