தமிழகத்தில் நோக்கியா மொபைல் போன் தொழிற்சாலை மூடல்!

சென்னை (27 மே 2020): தமிழகத்தில் உள்ள நோக்கியா மொபைல் போன் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதி வேகத்தில் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில்தான் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொலைத் தொடர்பு கியர் உற்பத்தி ஆலையில், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எத்தனை ஊழியர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டார்கள் என்கிற விவரத்தினை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும்...