நேபாளில் தடையாகிறது டிக்டாக் செயலி!

காத்மண்டு (14 நவம்பர் 2023) : நாட்டின் சமூக நல்லிணக்கம், குடும்ப கட்டமைப்புகள் மற்றும் சமூக உறவுகளைச் சீர்குலைக்கிறது போன்ற காரணங்களைச் சொல்லி, டிக்டாக் செயலியைத் தடை செய்துள்ளது நேபாள அரசு.  சுமார் ஒரு பில்லியன் மாதாந்திர பயனர்களைக் கொண்ட பிரபலமான வீடியோ-பகிர்வு தளம் டிக்டாக் (TikTok). டிக்டாக் செயலியால் இளம் வயதினர் மனதளவில் பாதிக்கப் படுவதாகவும், தீங்கு விளைவிக்கும் வீடியோ பதிவுகள் பற்றிய அரசு விதிகளை டிக்டாக் செயலி மீறுவதாகவும் காரணம் கூறப்பட்டு பல்வேறு நாடுகளில்…

மேலும்...

யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியாவே இல்லை – நேபாள பிரதமர் பரபரப்பு கருத்து!

காத்மண்டு (22 ஜூன் 2021): கா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியா உருவாக்கப்படவில்லை. என்றும் நேபாளில் தான் யோகா கண்டுபிடிக்கப்பட்டது என்று நேபாள நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஓலி. பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். நேற்று (21.06.2021) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிறப்புரையாற்றிய கே.பி. சர்மா ஓலி, யோகாவையும் தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என கூறியுள்ளார். இதுதொடர்பாக கூறிய அவர், , “இந்தியா ஒரு தேசமாக உருவாவதற்கு முன்பே, நேபாளத்தில் யோகா பயிற்சி செய்யப்பட்டது. யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது,…

மேலும்...

இராமர் நேபாளத்தில் பிறந்ததை நிரூபிப்போம் – நேபாள அரசு மீண்டும் அதிரடி!

காத்மண்டு (19 ஜூலை 2020): இராமர் நேபாளத்தில் பிறந்ததை தொல்லியல் அகழாய்வு மூலம் நிரூபிக்கவுள்ளதாக நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி, இந்து கடவுளான இராமர் அவதரித்த இடம் என இந்துக்களால் நம்பப்படுகிறது. அந்த இராமனை முன் வைத்து பாஜக ஆட்சிக் கட்டில் ஏறியது. ஆனால் இராமர் பிறந்த அயோத்தி நகரம் இருப்பது நேபாள நாட்டின் எல்லையோர நகரமான பிர்கஞ்ச் அருகேயுள்ள தோரி கிராமத்தின் அருகே இருக்கிறது என்று நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி…

மேலும்...

நேபாள பிரதமரின் தகவலால் வெடித்த அயோத்தி விவகாரம்!

காத்மாண்டு (14 ஜூலை 2020): இராமன் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் இருக்கிறது; ராமர் ஒரு நேபாளி என நேபாள பிரதமர் ஷர்மா ஒளி பேசிய கருத்து தற்போது பற்றி எரிகிறது. அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது. நேபாளத்தின் பால்மீகி ஆசிரமம்,மேற்கு பிர்குன்ஜ், தோரி-யில் அமைந்திருப்பதுதான் உண்மையான அயோத்தியா என்று நேபாள பிரதமர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்துள்ள நிலையில், நேபாள வெளியுறவுத்துற…

மேலும்...

இராமன் பிறந்த இடம் இந்தியாவில் இல்லை – நேபாள பிரதமர் பகீர் தகவல்!

புதுடெல்லி (14 ஜூலை 2020): இராமன் பிறந்த உண்மையான அயோத்தி, நேபாளத்தில் உள்ளது என்று நேபாள பிரதமர் ஒளி அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்தியா-வின் தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்குத் தடை விதித்த பின்னர் நேபாள பிரதமர் அதிரடியாக ஒரு விஷயத்தை போட்டுடைத்திருக்கின்றார். எந்த இராமனை முன் வைத்து சங்க அமைப்புக்கள் ஆட்சிக் கட்டில் ஏறினவோ, அந்த இராமன் இந்தியாவுக்கு உரியவன் அல்ல, அவனுடைய பிறப்பிடம் நேபாளம் என்று அதிரடிக் கருத்தைத் தெரிவித்து சங்க அமைப்புக்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கின்றார்….

மேலும்...

மூன்று இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் புதிய சட்ட மசோதா நேபாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

புதுடெல்லி (18 ஜூன் 2020): மூன்று இந்திய பிரதேசங்களை உள்ளடக்கிய நிர்வாக வரைபடத்தை புதுப்பிப்பதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை நேபாளத்தின் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது. இதற்கு நேபாளத்தின் நாடாளுமன்றத்தின் கீழ் சபை சனிக்கிழமையன்று ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பைபதிவு செய்தது. இந்நிலையில் இந்த மசோதா அனைத்து 57 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்ததோடு இன்று அந்த மசோத நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மே 8 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் தர்ச்சுலாவுடன் லிபுலேக்…

மேலும்...

சுற்றுலா சென்ற இந்தியர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

நேபாள் (22 ஜன 2020): நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 8 இந்தியர்கள் சொகுசுபங்களாவில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். நேபாளத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தளமான போகாராவிற்கு, கேரளாவைச் சேர்ந்த 15 சுற்றுலாப்பயணிகள் சென்றிருந்தனர். அவர்கள் காத்மாண்டுவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அந்த அறைகளில் எரிவாயுவில் இயங்கும் ஹீட்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அதிலிருந்து எரிவாயு கசிந்ததில் அங்கு தங்கியிருந்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அறையில் போதிய காற்றோட்டம் இல்லாததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு…

மேலும்...