புதுச்சேரி குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அரசு ஒப்புதல்!

புதுடெல்லி (24 பிப் 2021): புதுச்சேரி குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று முன் தினம் புதுச்சேரி அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். அதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றுக்கொண்டார். இதன்பின் புதுவை அரசியல் நிலவரம் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கையாக அனுப்பி வைத்தார். இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின்…

மேலும்...

புதுச்சேரி ஆட்சி கலைப்பு பாஜகவுக்கு நெருக்கடியா?

புதுச்சேரி (23 பிப் 2021): புதுச்சேரியில் எதிர்க்கட்சித் நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து அங்கு மீண்டும் யார் ஆட்சி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. புதுச்சேரியில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார். இதனை அடுத்து முதல்வர் நாராயணசாமி அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தார். இந்நிலையில் துணை நிலை ஆளுநரின் நகர்வு எப்படி இருக்கும் என்பதும் முக்கிய எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி…

மேலும்...

துரோகிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் – முதல்வர் காட்டம்!

புதுச்சேரி (22 பிப் 2021): ஆட்சி கவிழ காரணமான துரோகிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் “பெரும்பான்மையை இழந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம். முடிவு செய்ய வேண்டியது ஆளுநர் தான். என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜகவுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள். நியமன எம்.எல்.ஏக்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்.” என்றார்.

மேலும்...

ஒரே நாளில் காங்கிரஸ் திமுக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா!

புதுச்சேரி (21 பிப் 2021): புதுச்சேரியில் நாளை மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் . காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இருவர் இன்று ராஜினாமா செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நன்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமி நாராயணன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டிற்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின்…

மேலும்...

புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து – 4 வது எம்.எல்.ஏ ராஜினாமா!

புதுச்சேரி (16 பிப் 2021): புதுச்சேரியில் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து வருவதால் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது சமீபத்தில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். பின்பு அவர்கள் பாஜகவில் இணைந்தனர். அதைத்தொடர்ந்து மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். . காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை…

மேலும்...