நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்!

சென்னை (19 பிப் 2023): நடிகர் மயில்சாமி நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். உச்ச நட்சத்திரங்கள் பலருடனும் இணைந்து மயில்சாமி நடித்துள்ளார். சினிமாவை தாண்டி பொதுநலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். கொரோனா காலங்களில் மக்களுக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்து சினிமாவையும் தாண்டி பொதுவெளியில் நன்கு அறியப்பட்டவர். மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர்…

மேலும்...

கொரோனா பாதிப்பால் பிரபல நடிகர் மரணம்!

ஷார்ஜா (09 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் கேரளாவை சேர்ந்த நடிகர் எஸ்.ஏ.ஹாசன் ஷார்ஜாவில் உயிரிழந்துள்ளார். துபாயில் டெக்ஸ்டைல் தொழிலில் ஈடுபட்டு வரும் எஸ்.ஏ.ஹாசன், கேரள மாநிலம் ஆலுவா அருகில் உள்ள சங்கரன்குழியை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தொழிலதிபர் மட்டுமின்றி ”ஹலோ துபாய்க்காரன்” என்ற மலையாள படத்தைத் தயாரித்து அதில் நடித்தும் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே சார்ஜாவின் ரஸ் அல் ஹைமா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக…

மேலும்...

பிரபல தமிழ் நடிகர் மற்றும் நடிகை தற்கொலை!

சென்னை (06 ஜூன் 2020): தமிழ் டிவி நடிகர் ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரி ஜெய கல்யாணி இருவரும், சென்னையில் உள்ள அவர்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நடிகர்களின் சிதைந்த உடல்கள் சென்னையில் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள அவர்களது வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. நடிகர்களின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையினருக்கு புகார் கூறியுள்ளனர். உடனே அங்கு வந்த காவல்துறையினர் உடலை வீட்டிலிருந்து மீட்டு ​​பிரேத பரிசோதனைக்கு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு…

மேலும்...

பிரபல இயக்குநர், நடிகர் விசு மரணம்!

சென்னை (22 மார்ச் 2020): பிரபல இயக்குநரும் நடிகருமான விசு இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72. விசு, தமிழ் திரையுலகில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். உழைப்பாளி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர், வசனகர்த்தா, கதாசிரியராகவும் இருந்துள்ளார். இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித்…

மேலும்...

மாணவி மீது பாலியல் வன்கொடுமை – தமிழ் திரைப்பட நடிகர் கைது!

சென்னை (05 மார்ச் 2020): மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக திரைப்பட நடிகர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணாநகா் 7-ஆவது பிரதான சாலை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் சூா்யகாந்த். இவரது மகன் விஜய் ஹரீஸ் (25). இவா் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறாா். சூா்யகாந்தும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளாா். இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ஒரு கல்லூரி மாணவி, விஜய் ஹரீஸிடம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகியுள்ளாா். அந்த மாணவியை…

மேலும்...