சவூதியில் மக்கா , மதீனா தவிர, மற்ற மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவு!

ரியாத் (17 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சவூதி அரேபியாவில் மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. சீனாவில் மட்டுமே பரவிய இந்த வைரஸ், தற்போது உலகமெங்கும் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடுகளான குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் மசூதிகளில் தொழுகை நடத்துவது நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது….

மேலும்...

கத்தாரில் அனைத்து மசூதிகளும் காலவரையறை இன்றி மூடப்பட்டன!

தோஹா (17 மார்ச் 2020): வளைகுடா நாடுகளில் பிரபலமான கத்தார் நாட்டில் அனைத்து மசூதிகளும் இன்று முதல் காலவரையறை இன்றி மூடப்படுகின்றன. தினசரி முஸ்லிம்கள் தொழும் ஐவேளை தொழுகைகள் மட்டுமன்றி, வெள்ளிக் கிழமைக்கான சிறப்புத் தொழுகையும் நிறுத்தப்பட்டது. இதனை அரசு தரப்பில் AWQAF  சற்றுமுன் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (COVID-19) தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கத்தார் நாடு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி இருப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதால், மக்கள் கூட்டம்…

மேலும்...

வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு வருகை புரிந்த பல்வேறு மத முக்கிய பிரமுகர்கள்!

கொச்சி (12 ஜன 2020): கேரளாவில் பல்வேறு மத முக்கிய பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் பெரிய ஜும்மா பள்ளிக்கு வருகை புரிந்தனர். ஜனவரி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொச்சி பெரிய ஜும்மா மசூதி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் நீதிபதி தேவன் ராமச்சந்திரன், நீதிபதி அலெக்‌சாண்டர் தாமஸ், சுவாமி குருரத்னம் ஞான தவசி, ஃபாதர் வில்சன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வெள்ளிக்கிழமை ஜும்மா சிறப்பு சொற்பழிவை கேட்டனர். பின்பு இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய…

மேலும்...