ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடை – பள்ளியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மாணவிகள்!

உடுப்பி (22 ஏப் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் தடை விவகாரம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடுப்பி மாவட்டத்தி ஹிஜாப் அணிந்து 12 ஆம் வகுப்பு தேர்வெழுத சென்ற மாணவிகள் இருவர் தேர்வு எழுத அனுமதி மறுப்பட்டுள்ளனர். அனுமதி மறுக்கப்பட்ட இருவரும் ஹிஜாபுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் மனு அளித்தவர்கள் ஆவர். கர்நாடகா உடுப்பியில், இரண்டாம் பியூசி (12ஆம் வகுப்பு) தேர்வு எழுத வித்யோதயா பியூ கல்லூரி தேர்வு மையத்திற்கு வந்த அலியா அசாதி மற்றும் ரேஷ்மா…

மேலும்...

12 ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் கசிவு – 17 பேர் கைது!

லக்னோ (31 மார்ச் 2022): உத்திர பிரதேசத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு வினாத்தாள் கசிவு தொடர்பாக பள்ளி ஆசிரியர் உட்பட 17 பேரை கைது செய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படை நியமிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் பல்லியா மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வின் வினாத்தாள் நேற்று கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 17 பேரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனை அடுத்து வினாத்தாள் கசிந்ததால்…

மேலும்...

ஹிஜாப் தடை காரணமாக தேர்வை புறக்கணித்த 20 ஆயிரம் மாணவிகள்!

பெங்களூரு (29 மார்ச் 2022): கர்நாடகத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சிதேர்வு எழுதாத விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 73 ஆயிரத்து 846 பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 732 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 21 ஆயிரத்து 110 பேர் மாணவிகள். 4 பேர் 3-ம் பாலினத்தவர்கள். 3 ஆயிரத்து 444 தேர்வு மையங்களில் இந்த…

மேலும்...

ஹிஜாபுக்காக தேர்வை கைவிட வேண்டாம் – முஸ்லீம் மாணவிகளுக்கு அமைச்சர் கோரிக்கை!

பெங்களூரு (27 மார்ச் 2022): ஹிஜாப் விவகாரத்தில் ஈகோவை விட்டு தேர்வில் கலந்துகொள்ள வேண்டி கர்நாடகா கல்வி அமைச்சர் நாகேஷ் மாணவிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹிஜாப் அணிய வலியுறுத்துவார் சொல்லை கண்டுகொள்ளாதீர்கள் என்று கூறியுள்ள அமைச்சர் நாகேஷ் தேர்வுக்கு வராதவர்களுக்கு ஒரு மாதத்திற்கு பிறகு மறுதேர்வு நடத்தப்படும். “இதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழியில்லை,” என்று அவர் கூறினார். மேலும் ஹிஜாப் அணிந்து வரவேண்டும் என வலியுறுத்தும் மாணவர்கள் தேர்வுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கலந்து கொள்வார்கள் என்று…

மேலும்...

ஹிஜாப் அணிய தடை – மாணவிகளுக்கு மறுதேர்வு கிடையாது: கர்நாடக அரசு திட்டவட்டம்!

பெங்களுரு (21 மார்ச் 2022): ஹிஜாப் அணியாமல் பள்ளிக்கு வரமுடியாத மாணவிகளுக்கு மறு தேர்வு நடத்தப்படமாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் ஹிஜாப் அணியாமல் பள்ளிக்கு செல்ல முடியாததால் தேர்வு எழுத முடியவில்லை. இந்நிலையில் தேர்வு எழுத முடியாத மாணவிகளுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – தேர்வு எழுத முடியாத நிலையில் கர்நாடக முஸ்லிம் மாணவிகள்!

பெங்களூரு (24 பிப் 2022): ஹிஜாப் தடை விவகாரத்தால் கர்நாடக முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுத தயாராக இல்லை என தெரிவித்துள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, மாணவர்கள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணியக் கூடாது என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே எஸ்எஸ்எல்சி (10ஆம் வகுப்பு) மற்றும் (12ஆம் வகுப்பு) ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளன. மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில…

மேலும்...

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைப்பு!

புதுடெல்லி (14 ஏப் 2021): நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தொடர்ந்து, இன்று பிற்பகல் 12 மணியளவில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய…

மேலும்...

சவூதி அரேபியாவுக்கு பொறியாளர் வேலைக்கு வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ரியாத் (21 ஜன 2021): வெளிநாடுகளிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பொறியாளர் பணிக்கு வருவதற்கு முன்பு தொழில்முறை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொறியியல் பணிகளின் தரத்தை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. நாட்டில் தற்போதுள்ள பொறியியலாளர்களும் தகுதித் தேர்வை பல்வேறு கட்டங்களில் முடிப்பார்கள். தற்போது நாட்டில் பணிபுரியும் தகுதிவாய்ந்த வெளிநாட்டு பொறியியலாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான தொழில்முறை தேர்வு கடந்த மாதம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, புதிய பணி விசாக்களில் வரும்…

மேலும்...

கொரோனா பாதித்தும் கல்லூரி தேர்வை கைவிடாத மாணவர்!

வாணியம்பாடி (20 செப் 2020): கொரோனா பாதித்தும் கல்லூரி இறுதியாண்டு தேர்வை எழுதியுள்ளார் மாணவர் அனீசுர் ரஹ்மான்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷிராபாத் பகுதியை சேர்ந்த அனீசூர் ரஹமான் என்ற மாணவர், வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் இளங்கலை வணிகவியல் என்கிற பி.காம் பாடப்பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் கொரோனா தொற்று பாதிக்கபட்டு, கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளப்படி பல்கலைகழகம் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவ – மாணவிகளுக்கான தேர்வுகளை…

மேலும்...

மீண்டும் நடந்த பிளஸ் டூ பொதுத்தேர்வு!-ஏராளமான மாணவர்கள் மறுபடியும் ஆப்சென்ட்!

சென்னை (28 ஜூலை 2020): 327 மாணவர்கள் தேர்வுக்கு வராமல் நேற்று பிளஸ் டூ மறு பொதுத்தேர்வு நடைபெற்றது. பிளஸ்-டூ பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதிநாள்(மார்ச் 24-ந்தேதி) தேர்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகளில் சிலர் பங்குபெறமுடியவில்லை என்ற தகவல் வெளியானது. தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன்கருதி, மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு நேற்று (திங்கட்கிழமை)…

மேலும்...