அஹமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை!

அஹமதாபாத் (18 பிப் 2022): அஹமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கி அஹமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு, குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 56 பேர் பலியானார்கள், 200 பேர் காயமடைந்தனர். இந்தத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். அதில், 38 பேருக்கு தூக்கு தண்டனையும், மீதமுளள 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அஹமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக இந்த…

மேலும்...

சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் தூக்குத்தண்டனை வழங்கப்படும் முதல் பெண்மணி ஷப்னம் – பரபரப்பு பின்னணி!

லக்னோ (18 பிப் 2021): தனது குடும்பத்தின் ஏழு பேரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் ஒருவருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படுகிறது. வழக்கின் பின்னணி: அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர், சலீம் என்பவரை காதலித்தார். இதற்கு, ஷப்னம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 2008ல், ஷப்னம் வீட்டில், அவரது பெற்றோர் உட்பட ஏழு பேர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஷப்னத்தின் தொண்டையிலும், கத்தியால் குத்தப்பட்ட காயம் இருந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது,…

மேலும்...

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு மீண்டும் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்துள்ளது டெல்லி நீதிமன்றம். மார்ச் 3 ஆம் தேதி தூக்க்குத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது நிலுவையில் இருப்பதால் 3ம் தேதி நால்வரையும் தூக்கிலிட தடை விதிக்குமாறு பவன் குப்தா சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், குற்றவாளிகள்…

மேலும்...

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுமா?- தூக்கிலிருந்து தப்பிக்க மீண்டும் முயற்சி!

புதுடெல்லி (20 பிப் 2020): நிர்பயா கொலை வழக்கு குற்றவாளி தூக்கு தண்டனையை தள்ளிப் போட மீண்டும் முயற்சி செய்துள்ளார். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1ம் தேதி தூக்கிலிட டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா,…

மேலும்...

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்த மீண்டும் முயற்சி!

புதுடெல்லி (24 ஜன 2020): நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்த மீண்டும் முயற்சி நடைபெற்று வருகின்றன. டெல்லி மாணவி நிர்பயா கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் குற்றவாளிகளில் நான்கு பேரின் தூக்குத் தண்டனை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு நிறைவேற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 4 பேரும் தூக்குத் தண்டனையை தடுத்து நிறுத்த பல முயற்சிகள் மேற்கொண்டனர். எனினும் அடுத்தடுத்து சீராய்வு மனுக்கள், கருணை…

மேலும்...

தூக்குத் தண்டனை விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு மனு!

புதுடெல்லி (22 ஜன 2020): தூக்குத் தண்டனைகளின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்துள்ளது. நிர்பயா வன்புணர்வு கொலை குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டும் குறிப்பிட்ட நாளில் தண்டனை நிறைவேற்றப்படாமல் தள்ளிப் போகிறது. இதனால் நாட்டில் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையிலும், தூக்குத் தண்டனை விவகாரத்தில் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. முக்கிய வழக்குகளில்…

மேலும்...