Durai Murugan

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (25 டிச 2022): தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரை முருகனுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் 1:30க்கு துரை முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
Durai Murugan

அமைச்சர் துரை முருகனுக்கு எதிராக பஸ் ஊழியர்கள் போராட்டம்!

தஞ்சாவூர் (02 அக் 2021):மூத்த அமைச்சரான துரைமுருகன், வேலுார் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘நகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்துள்ளோம். பெண்கள் பஸ்சில் ஏறியதும், அப்படிப் போய் உட்காரு என கண்டக்டர்கள் கூறுகின்றனர். ‘அப்படிப்பட்டவர்களை, பெண்கள் முறத்தால் அடிக்க வேண்டும். அரசு பஸ் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா… பெண்களை தரக்குறைவாக நடத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களை வேலையை விட்டு அனுப்பி விடுவோம்’…

மேலும்...

வெடிக்கும் பூகம்பம் – திமுக விசிக இடையே விரிசல்?

சென்னை (16 அக் 2020): தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. ஒவ்வொரு கட்சியிலும் பொறுப்புகள் பிரிக்கப்பட்டு பல்வேறு குழுக்கள் அமைத்து தேர்தல் வேலைகள் நடைபெறுகின்றன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் தற்போது யார் இருக்கிறார்கள் யார் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியாத வகையில் கட்சித் தலைவர்கள் குழப்பி வருகின்றனர். திமுகவைப் பொறுத்தவரை மக்களவை தேர்தலின் போது அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் தேர்தல்…

மேலும்...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பாராட்டு!

சென்னை (09 செப் 2020); ‘தி.மு. கழகத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் கழகப் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு ஆகியோருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (09.09.2020) விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: “திரு. துரைமுருகன் அவர்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனங்கவர்ந்த தம்பியாக அதிகமதிகம் அவருடனேயே உடனிருந்து வலம் வந்தவர். கழகத்தின் கொள்கை கோட்பாடுகளில் சமரசமற்ற ஆழ்ந்த பிடிப்புள்ளவராக,…

மேலும்...

மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் பதவி யாருக்கு?

சென்னை (08 மார்ச் 2020): திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவியாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக உள்ளது. கட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் அதிகாரம் கொண்ட பதவியாகும். 1977-ம் ஆண்டில் இருந்து பொதுச்செயலாளராக க.அன்பழகன் இருந்து வந்தார். கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு அந்த பதவியில் அவர் நீடித்து வந்தார். அவர் காலமானதை அடுத்து அடுத்த மூத்த தலைவருக்கே இந்த…

மேலும்...

ஜல்லிக்கட்டு நாயகன் என்றால் ஓபிஎஸ் என்ன மாடுபிடி வீரரா? – துரைமுருகனின் காமெடி கலாட்டா!

சென்னை (19 பிப் 2020): விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் பேசும் போது, ஜல்லிக்கட்டு நாயகர் என்று குறிப்பிட்டு ஓ.பி.எஸ். பெயரை தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய துரைமுருகன், அவர் என்ன மாடுபிடி வீரரா என்றும் இதற்கு முன் காளைகளை அடக்கி இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினார். அப்போது அங்கு சிரிப்பலை எழுந்தது. இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டுக்காக சிறப்பு அனுமதியை பெற்று தந்ததால் ஓ.பி.எஸ்.ஸை அன்போடு ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பதாக விளக்கம் தந்தார்.

மேலும்...