தாய்லாந்து வளைகுடாவில் போர்க்கப்பல் மூழ்கியதில் 31 மாலுமிகளை காணவில்லை!

தாய்லாந்தில் போர்க்கப்பல் மூழ்கியதில் 31 மாலுமிகளை காணவில்லை 100க்கும் மேற்பட்ட மாலுமிகளை ஏற்றிச் சென்ற கப்பல் வளைகுடாவில் புயலில் சிக்கியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரை 75 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 31 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்து 12 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டதாகவும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கடற்படை செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “கப்பலில் தண்ணீர் புகுந்ததால் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ராணுவ…

மேலும்...

கோவையில் அதிர்ச்சி – கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மரணம்!

கோவை (17 மார்ச் 2020): கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட தாய்லாந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்து நாட்டில் இருந்து தமிழகத்துக்கு 7 பேர் கொண்ட குழு சுற்றுலா வந்தது. அந்த குழு தாய்லாந்து திரும்பிச் செல்ல இருந்த நிலையில் இவர்களில் டான் ரோசாக் என்பவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக கூறிய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவரை கொரோனா வார்டில் அனுமதித்தனர். மேலும் அவருக்கு சிறுநீரக பிரச்சனையும்…

மேலும்...

தாய்லாந்தில் பயங்கரம் – பொது மக்களை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்!

கொராட் (08 பிப் 2020): தாய்லாந்தில் பொதுமக்கள் மீது ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பாங்காக்கில் உள்ள கொராட் என்ற இடத்தில் புத்தமத கோவில் மற்றும் உள்ள வணிகவளாகம் அருகே ராணுவ வீரர் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை கொலையாளி பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிணைக்கைதிகளை கட்டடத்திற்குள் அழைத்து சென்ற பிறகும் துப்பாக்கி சத்தம்…

மேலும்...