மதத்தலைவர்களுடன் தலைமை செயலர் அவசரக் கூட்டம்!

சென்னை (03 ஏப் 2020): சென்னை தலைமை செயலர் அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று (03/04/2020) மாலை 03.00 மணிக்கு அனைத்து மத தலைவர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.கரோனா விவகாரத்தில் மதச்சாயம் பூசப்படுவதைத் தடுக்கும் நோக்கில் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே மாவட்டங்களில் மத தலைவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை செய்யவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும்...

தலைமைச் செயலருடன் முஸ்லிம் தலைவர்கள் பேசியது என்ன? – ஜவாஹிருல்லா விளக்கம்!

சென்னை (14 மார்ச் 2020): தமிழக தலைமை செயலருடன் முஸ்லிம் தலைவர்கள் சந்தித்து பேசியது குறித்து மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று(சனிக்கிழமை) மாலை சிஏஏ, என்.ஆர்.சி குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, “தமிழக தலைமை செயலர் முஸ்லிம் தலைவர்களுடன் சந்தித்து பேச அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி நாங்கள் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக சந்தித்துப் பேசினோம், அப்போது கோரிக்கைகளை…

மேலும்...

குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல – தலைமை செயலருக்கு முஸ்லிம் லீக் பதிலடி!

சென்னை (13 மார்ச் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டி இந்திய யூனியன் முஸ்லிம்லீக், தலைமை செயலருக்கு கோரிக்கை வைத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்க இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக தலைமை செயலர் அழைப்பு விடுத்திருந்தார். அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்கும் விதமாக வரும் 14 மார்ச் 2020 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், தமிழக தலைமை செயலகம் பழைய…

மேலும்...

இஸ்லாமிய தலைவர்களுக்கு தலைமை செயலர் அழைப்பு!

சென்னை (13 மார்ச் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்க இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக தலைமை செயலர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அழைப்பில், “குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பொது மக்களிடையே பல்வேறு ஐயாப்படுகள் உள்ளன. குறிப்பாக சிறுபான்மையினரிடம் இது தொடர்பாக கலந்தாலோசிக்கும் விதமாக வரும் 14 மார்ச் 2020 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், தமிழக தலைமை செயலகம் பழைய கட்டடம் 2 வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் கலந்தாலோசிக்கும்…

மேலும்...