ஈரோட்டில் நடைபெறும் ஜமாத்துல் உலமாவின் தேச ஒற்றுமை மாநாடு – வீடியோ!

ஈரோடு (16 ஜன 2023): ஈரோட்டில் ஜமாத்துல் உலமா சார்பில் தேச ஒற்றுமை மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர். பிளாட்டினம் மஹாலில் நேற்று தொடங்கிய இந்த மாநாடு இன்று இரவு நிறைவுறும். இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும்...

நடிகர் ரஜினிக்கு ஜமாத்துல் உலமா சபை கடிதம்!

சென்னை (28 பிப் 2020): நடிகர் ரஜினியை சந்தித்து பேச ஜமாத்துல் உலமா சபை முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக அவரை சந்திக்கும் விதமாக கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி, சிஏஏவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை‘ யின் பொதுச்செயலாளர் அன்வர் பாதுஷாஹ் உலவி, ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில் ரஜினியின் கருத்துகள் அதிருப்தி அளிப்பதாகவும், பெரும்பான்மை மக்களின் கருத்துக்களில்…

மேலும்...

முஸ்லிம் மத குருமார்கள் யார்? – ரஜினிக்கு ஜமாத்துல் உலமா சபை சரமாரி பதில்!

சென்னை (06 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசிய ரஜினி முஸ்லிம் மதகுருமார்களையும் சாடியிருந்த வேளையில் ரஜினிக்கு முஸ்லிம் மதகுருமார்கள் சரமாரி பதில் அளித்துள்ளனர். புதன் கிழமை அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. என்றார். மேலும் முஸ்லிம் மதகுருமார்களையும் ரஜினி சாடியிருந்தார். இந்நிலயில் தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில்…

மேலும்...