காமென்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிகாத் ஜரீனுக்கு தங்கம்!

பிர்மிங்காம்(08 ஜூலை 2022);: உலக சாம்பியனான நிகத் ஜரீன், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ பிரிவுக்கான குத்துசண்டை போட்டியின் இறுதிப் போட்டியில் வென்று தங்கப் பதக்கத்தை வென்றார். 26 வயதான இந்திய வீரர் நிகாத் ஜரீன், 33 வயது அயர்லாந்தின் கார்லி மெக்னாலை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார். ஆரம்பத்தில் போட்டி கடுமையாக இருந்தது. எனினும் அடுத்தடுத்த சுற்றுகளில் திறமையாக செயல்பட்டு ஜரீன் தங்கம் வென்றார். ஜரீனுக்கு பாராட்டுகள்…

மேலும்...

முஸ்லிம் கடைகளில் தங்கம் வாங்கக்கூடாது – இந்துத்துவாவினர் வலியுறுத்தல்!

பெங்களூரு (26 ஏப் 2022): முஸ்லிம் கடைகளில் தங்கம் வாங்கக்கூடாது என்று இந்துக்களுக்கு இந்துத்துவாவினர் உத்தரவிட்டுள்ளனர். பாஜக ஆளும் கர்நாடகாவில் முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரங்கள் தலைவிரித்து ஆடுகின்றன. ஹிஜாப் தடை, ஹலால் இறைச்சி, முஸ்லிம் வியாபாரிகள் மீதான உளவியல் தாக்குதல் என தொடரும் பிரச்சனை தற்போது அட்சய திருதியையின் போது கர்நாடகாவில் உள்ள முஸ்லிம்கள் நடத்தும் கடைகளில் தங்கம் வாங்க வேண்டாம் என்று இந்துக்களை வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து ஸ்ரீ ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறுகையில்,…

மேலும்...

பதற வைக்கும் விலை உயர்வு!

சென்னை (21 பிப் 2020): தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை அவ்வப்போது உச்சத்தை தொடுவதும், பின்பு சற்று குறைவதுமாக இருக்கும். அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக் கிழமையான இன்று(பிப்.21) சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.32,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.34 உயர்ந்து, ரூ.4,012-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 38 நாட்களில் மட்டும் சுமார் 2000 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது….

மேலும்...