ஒரே நாளில் உச்சத்தை தொட்ட டாஸ்மாக் விற்பனை!

சென்னை (09 ஜன 2022): நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 217.96 கோடி மது விற்பனையாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் தமிழகம் முழுவதும் அமலில் உள்ள காரணத்தினால் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட மாட்டாது. இதன் காரணமாக நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது குடிப்போர் அதிக அளவில் மது வாங்க குவிந்துள்ளனர். அதிகப்படியாக சென்னை மண்டலத்தில் மட்டும் 50.04 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது, மதுரை மண்டலத்தில் 43.20 கோடி ரூபாயும்,…

மேலும்...

பதில் சொல்லுங்கள் முதல்வரே – குஷ்பூ கேள்வி

சென்னை (12 ஜூன் 2021): “உங்களுக்கு வந்தா அது இரத்தம், எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னியா?” என்று பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஊரடங்கு, சில தளர்வுகளுடன் வரும் ஜூன் 21ஆம் தேதிவரை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப்…

மேலும்...

டாஸ்மாக்கில் காட்டும் ஆர்வம் பொதுமக்கள் மீது இல்லை – மக்கள் நீதி மய்யம்!

சென்னை (18 ஆக 2020): டாஸ்மாக்கில் காட்டும் ஆர்வம் பொதுமக்கள் மீது இல்லை என்று மக்கள் நீதிமய்யம் தொழிலாளர் அணி தெரிவித்துள்ளது, இதுகுறித்து அதன் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 நோய் தொற்று காரணமான ஊரடங்கு ஐந்தாவது மாதத்தை கடந்து செல்லவிருக்கும் சூழலில் மக்களின் இயல்பு வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு கிஞ்சித்தும் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் கடந்த ஐந்து மாதங்களாக குண்டூசி தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கி விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்…

மேலும்...

டாஸ்மாக்குக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு – ஸ்டாலின் கருத்து!

சென்னை (17 ஆக 2020): தமிழகத்தில் கொரோனா பரவலில் பெறும்பங்கு டாஸ்மாக்குக்கு இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “சென்னை தவிர பிற மாவட்டங்களில் #Covid19 பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும்…

மேலும்...

துப்பாக்கி ஏந்தும் கையில் மதுபாட்டில்கள் – அரசு வாகனத்தில் படு அமர்க்களம்!

ராணிப்பேட்டை (20 மே 2020): ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் இன்று காலை டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றுக் கொண்டு வந்தது. மதுப் பிரியர்கள் காலையிலே வரிசையில் நின்று டோக்கன் பெற்றுக்கொண்டு தேவையான சரக்குகளை வாங்கி கைகளிலும் இடுப்பிலும் பாக்கெட்களில் கோணிப்பை போன்றவற்றில் வாங்கி மறைத்து எடுத்துச் சென்றனர் தக்கோலம் டாஸ்மாக் கடையில் போதுமான மதுபானங்கள் இருந்தமையால் மது பிரியர்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிச் சென்றனர் இந்நிலையில் அப்பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை…

மேலும்...

மதுபான பிரியர்களுக்கு மேலும் மகிழ்ச்சியான செய்தி!

சென்னை (18 மே 2020): தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை நேரம் மாலை 5 மணி வரை இருந்த நிலையில், தற்போது இரவு 7 மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. கடந்த முறை எழுந்த விமர்சனங்களை தடுக்க டோக்கன் முறை, சமூக இடைவெளி என்று கட்டுப்பாடுகள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி…

மேலும்...

டாஸ்மாக் – செம்மையாக ஏமாந்த குடிகாரர்கள்!

சென்னை (15 மே 2020): டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் ஒன்று குடிகாரர்களின் அனைத்து தகவல்களையும் பெற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஊரடங்கு காலம் முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தால், அந்த விற்பனையை ஆன்லைன் மூலம் மேற்கொண்டு வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இன்று…

மேலும்...

டாஸ்மாக்கை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி – கமல் அதிரடி கருத்து!

சென்னை (15 மே 2020): டாஸ்மாக்கை மூட உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் கமல் கருத்து தெரிவித்துள்ளார். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக்கை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை இன்று விசாரித்த உச்ச…

மேலும்...

டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் – உச்ச நீதிமன்றம் அனுமதி!

புதுடெல்லி (15 மே 2020): தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் முகுல் ரோத்தஹி வாதிட்டார். ஆன்லைனில் மது விற்பனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,…

மேலும்...

இது சாதாரண வெற்றியல்ல – கமல்ஹாசன் பெருமிதம்!

சென்னை (09 மே 2020): டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சாதாரண வெற்றியல்ல . தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து உயர்நீதிமன்றத்தின்…

மேலும்...